ஷீலாவை தூக்கிட்டாங்க.. சென்னை காசிமேட்டில் பரபரப்பு.. இப்பவே கண்ணை கட்டுதே.. கோழிக்கறி வேற மிரட்டுது
சென்னை: காசிமேட்டில் மீன் வாங்க சென்ற மீன்பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.. மீன் வரத்து குறித்து மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜுன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் பிடி தடைக்காலம் மொத்தம் 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும்..

அதிரடி தடை: இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், குறைந்த ஆழத்திலேயே மீன்களை பிடித்து விற்பனை செய்கிறார்கள்.. இதனால், மீன்களின் வரத்து குறைந்து, விற்பனைக்கு வரும் மீன்களின் விலையும் பன்மடங்காக அதிகரித்துவிடுகிறது.
அதுவும் இல்லாமல், மீன்பிடி தடைக்காலம் என்பதால் சென்னை காசிமேடு மார்க்கெட்டுக்கு பெரிய வகை மீன்களும் வருவதில்லை. இதனால், மீன்கள் வரத்தும் குறைவாகவே உள்ளதாம்..
சங்கரா மீன்: கடந்த வாரம்கூட, காசிமேட்டுக்கு மீன் வாங்க சென்ற மீன் பிரியர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்... கவளை, நெத்திலி, சங்கரா போன்ற மீன்கள் மட்டுமே கிடைப்பதாகவும், வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
அதேசமயம் கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல விற்பனை செய்யப்பட்டன. வழக்கமாக வார இறுதி நாட்களில், அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சூடுபிடிக்கும். ஆனால், நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருந்ததாம்..
விலை உயர்வு: அதாவது, வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன.. எனவே, இந்த பெரிய மீன்களை விடுத்து, சிறியவகை மீன்களை வாங்குவதில், மீன்பிரியர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், இந்த சிறிய வகை மீன்களின் விலைகளும் ஒரேடியாக எகிறிவிட்டதாம்.. பெரியவகை மீன்களும் அதிக அளவு விற்பனைக்கு இல்லாவிட்டாலும், விலையை பற்றி கவலையே படாமல், தங்களுக்கு பிடித்த மீன்களை மீன்பிரியர்கள் வாங்கி சென்றார்கள்.
அந்தவகையில், காசிமேடு மார்க்கெட்டில் வஞ்சரம் - ரூ.1400, சங்கரா - ரூ.400, வவ்வால் - ரூ.750, கொடுவா - ரூ.600, நண்டு - ரூ.350, காணங்கத்தை - ரூ.200, ஷீலா - ரூ.500, இறால் - ரூ.400 விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த கவலை: ஆக மொத்தம் நேற்றைய தினம் மீன்களிலேயே ஷீலா மீன்களின் விலை மட்டுமே குறைவு என்பதால், பலரும் ஷீலா வாங்குவதிலேயே ஆர்வம் காட்டினார்கள்..
மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளதால், அதுவரை மீன்கள் வரத்து குறைந்தும், விலை அதிகமாகவும் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, தற்போது கோடை மழை பெய்து வருவதால், மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டதாம்.. இதுவும் மீன்விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் மீனவர்கள்.
கோழிக்கறி: இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், மீன்கள் டிமாண்டு காரணமாக சிக்கன் விலையும் ரூ.20 அதிகரித்து விட்டதாம்.. கடந்த வாரம், 1 கிலோ சிக்கன் 260 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையல், நேற்று ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர்: அதேபோல, வேலூர் மீன் மார்க்கெட்டிலும் விலை உயர்ந்தே காணப்பட்டது.. இந்த மார்க்கெட்டிற்கு எப்போதுமே, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 முதல் 7 கன்டெயினரில் மீன்கள் வரத்து இருக்குமாம்.. ஆனால், நேற்றைய தினம் 2 கன்டெய்னர்களில் மட்டுமே மீன்கள் வந்திருக்கின்றன.. மங்களூரு, கோழிக்கோடு மற்றும் கிருஷ்ணகிரி, சாத்தனூர், மற்ற நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மீன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், வேலூர் மார்க்கெட்டிலும் மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.
பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.1600, சிறிய வஞ்சிரம் ரு.500, இறால் ரூ.300 முதல் 500 வரையும், கொடுவா, ரூ.900 வரையும், கடல் வவ்வா 900 வரையும், கருப்பு வவ்வால் ரூ700, சாலமன் ரூ.800, சங்கரா ரூ.250 முதல் 400 வரையும், தேங்காய்பாறை ரூ.350, அய்லா 250, நெத்திலி 250, கிழங்கா 140-க்கும் விற்பனையாயின.












Click it and Unblock the Notifications