சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டென புது ரூட் எடுத்த திமுக.. ஸ்டாலினின் ரகசிய மூவ்.. சைலண்ட்டாக வாட்ச் செய்யும் பாஜக.. என்னாச்சு?

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மேலிடத்தில் மிக முக்கிய மூவ் ஒன்று நடந்து கொண்டிருக்கிறாம்.. அதை எப்படியாவது சக்ஸஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலினின் தரப்பு மும்முரமாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த முறை முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் ஆயிரக்கணக்கான முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று கூறப்பட்டாலும், குடும்பத்துடன் அவர் சென்றது பல்வேறு விமர்சனங்களையும் தேவையில்லாத சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிட்டது.

அரசு முறைப் பயணமாக சென்றாலும், தனி விமானத்துக்கான செலவை திமுகவே ஏற்றுக் கொண்டுள்ளதாக ஸ்டாலினுடன் துபாய் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தும், அந்த சர்ச்சை முழுமையாக நீங்கவில்லை..

திமுக செக்.. இறங்கி வருகிறார் ஆளுநர் ரவி.. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடிவு? நடந்தது என்ன? திமுக செக்.. இறங்கி வருகிறார் ஆளுநர் ரவி.. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடிவு? நடந்தது என்ன?

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

அதுமட்டுமல்ல, துபாயில் ஸ்டாலினின் ஒவ்வொரு நகர்வுகளையும் மத்திய பாஜக அரசு தூதரக அதிகாரிகள் மூலமாக கண்காணித்ததாகவும் செய்திகள் அப்போது வெளியாகின.. குறிப்பாக, துபாய் ஏர்போர்ட்டில் ஸ்டாலின் இறங்கியதில் இருந்தே, இந்தியாவில் இருந்து இதற்கென தனியாக அனுப்பி வைக்கப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளும் ஸ்டாலினின் நகர்வுகளை கவனித்து அவ்வப்போது இந்திய தூதரகத்துக்கு அனுப்பி அங்கிருந்து டெல்லி மேலிடத்துக்கு மெசேஜ் பாஸ் செய்ததாக கூறப்பட்டது.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

அப்போதுதான், லுலு குழுமத்துடன் போடப்பட்ட ரூ.3,500 கோடி ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் அவரது மருமகன் சபரீசனின் ஏற்பாட்டின் பேரிலேயே அரங்கேறியுள்ளதாக ஸ்பெஷல் தகவல் ஒன்றையும் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த ரிப்போர்ட்டை வைத்து பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசனையும் நடத்தி உள்ளதாக கூறப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு முக்கியமான செய்தி திமுகவில் பரபரபத்து காணப்படுகிறது.

 லூலூ நிறுவனம்

லூலூ நிறுவனம்

துபாய் பயணத்தைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக இந்த வருடம் இறுதியில் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லவிருக்கிறார் ஸ்டாலின்... முதல்வர் ஸ்டாலினின் 2வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.. துபாய் முதலீடுகளை விட இது பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள் தமிழக தொழில்துறையினர்... இப்போது திமுக அரசுக்கும், ஸ்டாலினின் குடும்பத்துக்கும் மிக நெருக்கமாக இருப்பது லூலூ நிறுவனம் தான் என்பதை மறுக்க முடியாது.

 ரகசியம்

ரகசியம்

இந்த நிறுவனம் தான், துபாய் முதலீட்டாளர்களை ஸ்டாலின் சந்திப்பதில் முக்கிய பங்காற்றியது. 2வது வெளிநாட்டு பயணத்திலும் ஸ்டாலின் சந்திக்கவிருக்கும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை ரகசியமாக முன்னெடுத்து வருகிறதாம் லூலூ நிறுவனம். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைக்கும் பொறுப்பினை இந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கிறதாம்.

துபாய்

துபாய்

துபாய் பயணத்தில் அரசு இலக்கு வைத்திருந்த அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. ஆனால், அந்த குறைகள் இரண்டாவது பயணத்தில் இருந்து விடக்கூடாது என கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்களாம் அதிகாரிகள். பெரிய எண்ணிக்கையில் முதலீடுகளை ஈர்க்க முயற்சித்து வருகிறது இந்த நிறுவனம். குறைந்தபட்சம் 50,000 கோடிகளுக்கான முதலீடுகள் தமிழகம் வருவதற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே ஸ்டாலின் பயணத் தேதி முடிவாகும் என்கிறது கோட்டை வட்டாரம்.

English summary
when will mk stalin go to london and bjp government watches chief ministers political activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X