Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 சொல்.. "பேசாம பிஜேபிக்கு வந்துடுங்களேன்", பட்டுனு கேட்ட தலைவர்.. அதுக்கு ஓபிஎஸ் "நச்" பதிலை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாம்.. சட்டரீதியான நடவடிக்கைகளை கையில் எடுக்க போவதாக சொன்னாலும், கடுமையான அப்செட்டுக்கு ஆளாகி உள்ளாராம் ஓபிஎஸ்.

கடந்த பிப்ரவரி மாதம், பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருந்தது.

அத்துடன், அந்த பொதுக்குழுவின்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியானது..

தினகரன்

தினகரன்

சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவானது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துவிட்டதாகவே அப்போதே பார்க்கப்பட்டது.. ஓபிஎஸ் தரப்புக்கு மட்டுமல்லாமல், சசிகலா, தினகரனுக்கும் இது மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.. அன்றையதினம் இரவே, சசிகலாவிடமும் தினகரனிடமும் போனில் பேசினாராம் ஓபிஎஸ்.. அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன்.

 சோர்ஸ் எங்கே

சோர்ஸ் எங்கே

பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவைத்தான் (ஓபிஎஸ்சுக்கு சாதகமானவை) சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும்ன்னு சொன்னீங்க.. ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டாராம் சசிகலா. அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டுள்ளார். தினகரனிடம் பேசியபோதும் இதே ரீதியிலேயே ஓபிஎஸ் பேச்சு இருந்ததாம்... அதேபோல, நேற்றைய தினம், பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததுமே, நொறுங்கிப்போன ஓபிஎஸ், மறுபடியும் சசிகலாவுக்கு போனை போட்டு பேசினாராம்..

 பெரிய்ய்ய லாபி

பெரிய்ய்ய லாபி

இதுகுறித்து நம் "ஒன் இந்தியா தமிழில்" ஸ்பெஷல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, ஓபிஎஸ்ஸிடம் சசிகலா "நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பழனிச்சாமி எல்லா இடத்திலும் நல்ல லாபி வைத்திருக்கிறார். அதே மாதிரி நீங்களும் சோர்சை உருவாக்குங்கள். பாஜகவை நம்பாதீர்கள் என சொன்னேன். நீங்களும் கவனம் செலுத்துவதாகச் சொன்னீர்கள். ஆனா, கவனம் செலுத்தியமாதிரி தெரியலை. இப்படி கோட்டைவிட்டு விட்டீர்களே?" என்று கோபமாக வார்த்தைகளை வீசினாராம் சசிலகா.

 சோர்ஸஸ்

சோர்ஸஸ்

அதற்கு ஓபிஎஸ், "நீதிமன்ற விவகாரங்களை முன்னாள் ஆளுநர் ஒருவர் மூலமாகத்தான் அணுகுகிறார் எடப்பாடி. அவர்களை நம்மால் ரீச் பண்ணமுடியலைம்மா... பாஜகவின் முக்கிய சோர்ஸ்களிடம் நான் பேசும்போது, "கவலைப்படாதீங்க; பயப்படாதீங்க. உங்களை தலைமை கைவிட்டுவிடாது" என்றே எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். அதனாலேயே நீதித்துறை தரப்பில் சீரியஸ் காட்டாமல் இருந்து விட்டேன். பாஜக சோர்ஸை முழுமையாக நம்பியது என் தப்புதான்.. என்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள்" என்று சசிகலாவிடம் தனது மனக்குமுறல்களை கொட்டித் கொட்டினாராம் ஓபிஎஸ்.

மெசேஜ்

மெசேஜ்

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.. குஜராத் மாநிலத்திலுள்ள பாஜகவின் சீனியர் ஒருவர் தான் ஓபிஎஸ்ஸூக்கும் பாஜகவின் தேசிய தலைமைக்கும் பாலமாக இருந்து வருகிறார்.. மோடி அல்லது அமித்ஷாவிடம் ஓபிஎஸ் பேசுவதாக இருந்தாலோ அல்லது அவர்களுக்கு மெசேஜ் சொல்வதாக இருந்தாலோ அந்த சீனியர் மூலமாகத்தான் எல்லாம் நடக்குமாம்.. இந்த நிலையில், அந்த சீனியரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் ஓபிஎஸ். "பாஜக தன்னை கைவிட்டுவிட்டது" என்று புலம்பித் தள்ளியுள்ளார்...

 ம்ஹூம் மாட்டேன்

ம்ஹூம் மாட்டேன்

அதற்கு அந்த சீனியர், "இப்பவும் உங்கள் மீது பாஜக தலைமைக்கு நல்ல மரியாதை இருக்கிறது... அதிமுகவில் உங்களால் சர்வைவல் பண்ண முடியாது என்று நீங்கள் நினைத்தால், பேசாமல் பாஜகவில் இணைந்து விடுங்கள்... பாஜகவின் மாநில தலைவர் நீங்கள் தான்.. அதனால் எம்எல்ஏ பதவி பறிபோனால் போகட்டுமே.. கவலையேப்பட வேண்டாம்.. அதற்கு மாற்று யோசனை பாஜகவில் இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ஒப்புக்கொள்ளாத ஓபிஎஸ், "நான் பாஜகவில் இணைந்தால் அதைவிட பெரிய தவறு வேறு எதுவும் இருக்காது... ஏன்னா, அந்த முடிவை நான் எடுத்தால், இன்றைக்கு என்னை நம்பியிருக்கும் தொண்டர்கள் யாரும் என்னுடன் வரமாட்டார்கள்... அவர்கள் அடிப்படையில் எம்ஜிஆர், ஜெயலலிதா உணர்வாளர்கள்... யாருமே என்னுடன் வராதபோது பாஜகவில் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்க முடியும்?

 லாஸ்ட் சான்ஸ்

லாஸ்ட் சான்ஸ்

இதைத்தாண்டி, அந்த முடிவை நான் எடுத்தால் நானே பழனிச்சாமியின் கீழ் தொண்டர்களை ஒன்று சேர்த்துவிடுவதாக அமைந்து விடும்... போகாத ஊருக்கு வழிச் சொல்லாதீங்க.. எனக்கு நம்பிக்கை கொடுத்தமாதிரி பாஜக நடந்து கொள்ளும் என்றால், அதிமுகவில் எனக்கான மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கிடைக்கச் செய்கிற மாதிரி வழக்கு விவகாரங்களில் எனக்கு உதவி செய்ய மேலிடத்தில் சொல்லுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டாராம் ஓபிஎஸ்.. அப்படியானால் பாஜக அடுத்து என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.. தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் இறுதி முடிவு என்பதால், பாஜகவின் உதவி ஓபிஎஸ்ஸூக்கு இதன்மூலம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+