Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு ரேஷனில் கிடையாதா? 6000 டன் ராகி கொள்முதலுக்கு இப்ப அனுமதி! சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தர்மபுரி, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. எனினும், தமிழகம் முழுவதுமே ரேஷனில் 2 கிலோ கேழ்வரகை விரிவுப்படுத்த நம்முடைய அரசு முயற்சித்து வருகிறது.. கொள்முதல் குறைவாக இருந்துவரும் நிலையில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு விநியோகிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் தமிழக விவசாயிகளிடம் இருந்து, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன்தாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதுபோல, கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.

Ragi Ration card holders red lentils

சமீபத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் செய்தியாளர்களுக்கு தந்த பேட்டியில், கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு வராது.. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2, கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 மதிப்பில் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது" என்றார்.

ரேஷன் கடைகளில் கேழ்வரகு

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக ரேஷன் கடைகளில், கேழ்வரகு வினியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வந்தாலும், சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டையொட்டி ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களையும் சேர்த்து வழங்க அரசு முடிவெடுத்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி பெறும்அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க கடந்த 2023-ல் அரசு உத்தரவிட்டது.

இதன் முதற்கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.. மற்ற மாவட்டங்களிலும் கேழ்வரகு விநியோகிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுதானியங்கள் - விவசாயிகள்

அதேபோல ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானிய உணவு வகைகளை மத்திய அரசும் கட்டாயமாக்கி உள்ளது.. இதன்காரணமாக, தமிழக விவசாயிகளிடம் இருந்து, கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த சீசனில், 17000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி, 2024 நவம்பரில் துவங்கிய அந்த சீசன், இந்த வருட ஜனவரியில் முடிவடைந்தது. பிறகு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், வெறும் 3,742 டன் மட்டுமே நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, கிலோவுக்கு, 42.90 ரூபாய் வழங்கப்பட்டது. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவு கேழ்வரகு கொள்முதல் செய்யப்படவில்லை.

கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம்

இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று சந்தேகம் கிளம்பியது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் சொல்லும்போது, கடந்த 2 வருடங்களாக அரசு கேழ்வரகு கொள்முதல் செய்து வருவது பல விவசாயிகளுக்கு இன்னமும் தெரியாமல் உள்ளது. அதிலும், தனியார் நிறுவனங்களை விட, அரசு வழங்கும் விலை அதிகம் இருந்தபோதிலும் அதுகுறித்து தெரியாமல் உள்ளதால், விவசாயிகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கொள்முதல் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

நுகர்பொருள் வாணிப கழகம்

இந்நிலையில், தமிழக விவசாயிகளிடமிருந்து, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி, இந்த மாதம் முதல் 2026 மார்ச் வரை, 6000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளது.

கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு, 48.86 ரூபாய் என, 100 கிலோ எடை கொண்ட குவிண்டாலுக்கு, ரூ.4886 வழங்கப்பட உள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 48.86 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+