இபிஎஸ்- ஓபிஎஸ்ஸுக்கு ஷாக்! அதிமுக ஆபீஸுக்கு சசிகலா எப்போது வருகிறார்? ஆதரவாளர்கள் சொன்ன புது தகவல்!
சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா எப்போது வருகை தருகிறார் என்பது குறித்து தொண்டர்கள் தகவல்களை அளித்துள்ளனர்.
அதிமுகவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே சிறு புகையாக இருந்து வந்த நெருப்பு தற்போது பற்றி எரிகிறது. அதிமுகவிலிருந்து இரு தலைமைகளும் ஒருவரை ஒருவர் நீக்கிக் கொண்டனர். மேலும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டார்கள்.
ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றிக் கிடைக்கும் என்பது ஏற்கெனவே ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அறிந்த ஒன்றுதான். அந்த இடைத் தேர்தலில் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை முடக்கப்பட்டதால் தனித்தனியே சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

அதிமுக வெற்றி
எனவே அதிமுக வெற்றி என்பது அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே நடக்கும். இவ்வாறு அதிமுகவில் புயல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதை சீரமைக்க கட்சியை தான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு பக்கம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஒன்றிணையும்
விரைவில் அதிமுக ஒன்றிணையும். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள் என சசிகலா கூறுகிறார். இதற்காக அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை எல்லாம் சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அவரது திநகர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதிமுகவுக்கு தலைமையேற்க அழைப்பு
அது போல் அதிமுகவுக்கு தலைமையேற்கவும் அழைத்தனர். இந்த நிர்வாகிகளில் மூத்த நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் சுயநலத்திற்காக இது போல் அடித்துக் கொள்கிறார்கள். இந்த புதிய பதவிகள் எல்லாம் சில காலத்திற்கு மட்டுமே இருக்கும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு சசிகலா நிச்சயம் அதிமுக ஆபிஸுக்கு வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்கள்.
Recommended Video

சசிகலா ஆதரவாளர்கள்
இது குறித்து சசிகலா ஆதரவு நிர்வாகிகளிடம் கேட்ட போது அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாகத்தான் வரும். அது போல் அதிமுக தலைமை அலுவலகத் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்புகள் வந்த பிறகு சசிகலா நிச்சயம் தலைமை அலுவலகத்திற்கு வருவார். அவரது தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து 2026 இல் இரட்டை இலை ஆட்சி அமையும் என்றனர்.
-
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications