இலவச சைக்கிள் ரெடி.. பள்ளி மாணவ, மாணவியருக்கு குட் நியூஸ் சொன்ன கல்வித்துறை.. எப்போது வழங்கப்படும்?
சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 11ம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதை கோர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறைந்த மாணவ, மாணவியர் உள்ள இடங்களில் உதிரி பாகங்களை கோர்க்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

இன்னும் சில பள்ளிகளில் உதிரி பாகங்களை கோர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் அடுத்த வாரம் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வரை வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
தாமதமாக திறக்கப்பட்ட பள்ளிகள்: இந்த கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
பள்ளிகள் தொடங்கி நடந்து வருகிறது: இந்த நிலையில் வெயில், மழைக்கு இடையே ஒருவழியாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.
கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு இது தொடர்பாக பெற்றோர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அல்லது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
இரண்டு முக்கிய உத்தரவு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகள் இப்போதுதான் திறந்து உள்ளன. இந்த நேரத்தில் 1000 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
இதனால் பல பள்ளிகளில் வகுப்புகள் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். முக்கியமாக பாடங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இதை தடுக்கும் விதமாக 1000 ஆசிரியர்களுக்கும் மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அணில் மகேஷ் கூறி உள்ளார்.
இது போக அமைச்சர் அன்பில் மகேஷ் இரண்டு முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும்போது, முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி சரியாக வழங்கப்படுகிறதா என்று உறுதி செய்யப்படும்.
இரண்டாவதாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications