சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 ஆம் வகுப்பு தனித்தேர்வை ரத்து செய்ய முடியாது... பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை - தமிழக அரசு

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் ஹைகோர்ட்டில் அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. ஐந்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

When will schools and colleges reopen in Tamil Nadu - Government tells High Court

பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் பாஸ் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தனித் தேர்வர்களும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்பவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

பதினொன்றாம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருவதால் தனித் தேர்வர்கள் அதில் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தனித் தேர்வர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதால் ஒரு ஆண்டு காலத்தை இழக்க நேரிடும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

நீதிமன்றம் அவமதிப்பு... வாபஸ் பெற... பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்!!நீதிமன்றம் அவமதிப்பு... வாபஸ் பெற... பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்!!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர் தனித் தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு நடத்தி முடிவு இரு வாரங்களில் வெளியிடப்படும் எனக் கூறினார். இதனால் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

English summary
No decision has been taken regarding the opening of schools and colleges in Tamil Nadu. The Tamil Nadu government has told the Chennai High Court that the results will be released in two weeks after conducting an examination for the Private students Reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X