வங்கி கணக்கில்.. தமிழக அரசே தரும் ரூ.1000.. முதல் தவணை எப்போது? யாருக்கு வழங்கப்படும்? வந்த தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில் எப்போது பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu Government Notification m k stalin dmk

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்; பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும் பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம்.

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் இல்லை. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து அரசாணை வெளியீடு. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்காக விண்ணப்பிக்க பிரத்யேக தகவல் முகமை (Portal) உருவாக்கம் உயர்கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக, மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்

தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகைப் பெற இயலாது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று ஐடிஐ படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம்.

எப்போது தொடக்கம்: அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில் எப்போது பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தவணை பணம் வழங்கப்படலாம் என்கிறார்கள்.

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பணம்: இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.

நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+