சென்னை வெள்ள நிவாரணம்.. ரேஷன் கடைகளில் எப்போது ரூ.6000 வழங்கப்படும்? வெளியான முக்கிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; வெள்ளம் பாதித்த இடங்களில் ₹6,000 நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் விநியோகிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் எப்போதில் இருந்து ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

When will Tamil Nadu government give the Rs.6000 relief fund in Ration Shops due to flood?

எவ்வளவு நிவாரணம்: இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்: சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்:

கூடுதல் நிவாரணம்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்:

சேதங்களுக்கான நிவாரணம்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக m.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்:

படகுகள் நிவாரணம்: சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட). ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

எப்போது வழங்கப்படும்: வெள்ளம் பாதித்த இடங்களில் ₹6,000 நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் விநியோகிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் எப்போதில் இருந்து ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதன்படி இன்னும் 1 வாரத்திற்கு பின்பாக இந்த தொகை வழங்கப்படும்; இன்னும் ரேஷன் கடைகள் சென்னையில் முழுமையாக இயங்க தொடங்கவில்லை. இன்னும் 1 வாரத்திற்கு பின் கடைகள் இயங்கும்.

அதன்பின் கடைகளுக்கு எப்படி பணம் கொடுக்க வேண்டும் என்று எஸ்ஓபி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறைந்தது 10 நாட்களில் நடக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+