Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கை மரம்.. செவ்வாய்க்கிழமை கிளைமேக்ஸ்.. சைலண்ட்மோடில் பாஜக, அதிமுக? அப்ப உள்ளதும் போயிடும் போல?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இன்னும் கூட்டணி உறுதியாகாத சூழலில், பரபரப்பு தகவல்களும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
தேமுதிக - அதிமுக கூட்டணி இடையே இழுபறி நீடித்து வருகிறது.. தேமுதிகவுக்கு 3 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு கடந்த வாரம் செய்திருந்த நிலையில், 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாம்.. குறிப்பாக, கிருஷ்ணகிரி, விருதுநகர், கடலூர், திருச்சியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன.

பாமக: ஆனால், பாமகவும் இதே தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறதாம்.. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சில தகவல்கள் வலம்வந்தன.. வட மாவட்டங்களில் 2 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று அதிமுக மேலிடத்திடம் அழுத்தம் தந்து வருவதாக தெரிகிறது.

When will the AIADMK DMDK alliance be confirmed and and what are the Preemalatha Vijayakanths Big Demand

இப்படிப்பட்ட சூழலில், பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.. விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் பிரேமலதாவை சந்தித்து பேசினர். அப்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.. பிறகு, கடந்த 6-ந்தேதி ராயப்பேட்டையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடந்தது.

இறுதி முடிவு: ஆனால், அதற்கு பிறகு 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம் பிரேமலதா திடீரென செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி பற்றி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று சொல்லி அதிர வைத்தார்..

தொடர்ந்து பிரேமலதா பேசும்போது, "பாஜகவும் தேமுதிக உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி முடிவாகவில்லை.. மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம். மாநிலங்களவை சீட் கேட்பது எங்கள் உரிமை என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

இழுபறி: இந்நிலையில், இன்றைய தினம், 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மீடியாக்களில் தகவல்கள் பரவின. ஆனால், தேமுதிக இதையும் மறுத்துள்ளது.. உண்மையிலேயே என்ன நடக்கிறது தேமுதிகவில் என்று தெரியவில்லை.

4 மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவித்த நிலையில், மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுகவிடம் மீண்டும் கோரிக்கை தேமுதிக விடுத்ததால், அதிமுக எந்தவிதமான பதிலையும் சொல்லாமல் கப்சிப் மோடுக்கு போய்விட்டதாம். அதனால்தான், இன்றைய தினம் நடத்தவிருந்ததாக கூறப்பட்ட பேச்சுவார்த்தை, அடுத்த வாரத்துக்கு தள்ளி போயிருக்கிறதாம்..

வெளியூர்: ஆனால், இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் 2பேர் வெளியூரில் இருக்கிறார்களாம். அதனால்தான், இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தவில்லையாம். அவர்கள் செவ்வாய்கிழமை சென்னை வருவதால், அன்றைய தினம் அல்லது மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்கிறார்கள்.

உண்மையிலேயே தேமுதிமுக - அதிமுக மற்றும் தேமுதிக - பாஜக இடையே என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. எனினும், பெரும்பாலான கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்து கொண்டிருப்பதால், தேமுதிகவிலும் ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+