ரவீந்திரநாத்.. திமுகவை புகழ்ந்தது சரியா.. ஓபிஎஸ் பிளான் இதுதான்.. ஜேசிடி பிரபாகர் என்ன சொல்கிறார்?
ரவீந்திரநாத் திமுக குறித்து பேசியது தொடர்பாக ஜேசிடி பிரபாகர் பதில் அளித்துள்ளார்
சென்னை: ஓபிஎஸ் மகன் திமுக அரசு குறித்து புகழ்ந்தும், முக்கியத்துவம் தந்தும் பேசியிருந்தால் அது தவறு என்று ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.. மேலும், அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ளது.. பெரும்பான்மை ஆதரவுடன் கடந்த 11ம் தேதி, பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதை அடுத்து, கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்தார்... இந்த அறிவிப்புகள் எல்லாம் அதிமுக சட்ட விதிகள் படி செல்லாது என்று ஓபிஎஸ்ஸும் அறிவித்து வருகிறார்.. எனவே, இரு தரப்பினரும் கோர்ட்டையும், தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர்..

ஜேசிடி பிரபாகர்
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர், பிரபல தனியார் டிவிக்கு பேட்டி தந்துள்ளார். நெறியாளர் கேள்வி கேட்கும்போது, "திமுக அரசு சிறப்பாக இருக்கிறது என்று ஓபிஎஸ் மகன் பேசுகிறார்.. நல்லாட்சி நடப்பதாக சொல்லி இருக்கிறார்.. இது அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது.. ஆனால், இதுவரை தான் பேசியது குறித்து அவர் மறுக்கவே இல்லை.. ஜுன் 23-க்கு 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஓபி ரவீந்திரநாத் பேட்டி தரும்போது, அதிமுக பொதுக்குழு பற்றி தமிழக அரசு முடிவெடுக்கும் என்றாரே.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

ரவீந்திரநாத் பேட்டி
அதற்கு ஜேசிடி பிரகாகர், அதிமுக விவகாரம் குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஓபிஎஸ் மகன் சொல்லியிருந்தால் அது தவறு.. ஆனால், ஓபிஎஸ் மீது எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாமல், ஆதாரப்பூர்வமாக எதையும் நிரூபிக்கவும் முடியாமல், இப்படி கொச்சைப்படுத்துவதாக எண்ணி, அவரை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக, இப்படி சிந்தித்து எடுத்த முடிவுதானே தவிர, எள்ளளவும் உண்மை கிடையாது" என்றார்... உடனே, அடுத்த கேள்வியாக, அவர்கள் எல்லாம் சேர்ந்து ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்துகிறார்கள், ஓரங்கட்டுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. ஆனால், தர்மயுத்தம் நடத்தும்போது இருந்தவர்களில் அவர் பக்கம் நின்றவர்களில் எத்தனை பேர் இன்று ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்? என்று கேட்கப்பட்டது.

ரவீந்திரநாத்
அதற்கு ஜேசிடி பிரபாகர், "தர்மயுத்தம் நடத்தும்போது, தமிழகத்தின் சூழ்நிலையே வேறு.. மக்களும்சரி, தொண்டர்களும் சரி, அம்மா இப்படி செத்து போய்ட்டாங்களே, திடீரென மறைய என்ன காரணம்? 75 நாட்கள் அவரை பார்க்க விடாமல் செய்தது யார்? எதற்காக மருத்துவமனை சரியான விவரங்களை தெரிவிக்கவில்லை? என்ற கோபத்தில் மக்கள் எல்லாம் வெகுண்டு எழுந்தபோது, அந்த கேள்விகளை ஓபிஎஸ் கேட்கிறார் என்றதுமே, அவர் கை பலத்து ஓங்கியதுதானே தவிர, இது தனிப்பட்ட ஓபிஎஸ்ஸுக்காக இல்லை.. அந்த மரணம் குறித்த காரணத்தை மக்கள் விரும்பியதுதான் அப்போது காரணம் என்று பதிலளித்தார் ஜேசிடி பிரபாகர்.

நிரந்தர பிளவு
அடுத்தகேள்வியாக, "இது நிரந்தர பிளவு? அதிமுகவில் சமரசத்துக்கு இடமில்லை என்று எடுத்து கொள்ளலாமா? என்று நெறியாளர் கேட்கிறார்.. அதற்கு பிரபாகர், "இல்லை.. அப்படி எடுத்து கொள்ளக்கூடாது.. தவறு செய்தவர்கள் திருந்துவதற்கு நிறைய இருக்கிறது. ஒருவேளை மீண்டும் ஒருங்கிணைப்பாளராக அந்த பதவிக்கே ஓபிஎஸ் போய்விடலாம் என்று நினைக்கலாம்.. அல்லது நடந்ததெல்லாம் தவறு என்று சட்டவிதிகளின்படி தேர்தல் கமிஷன் சொன்னால், எல்லாமே தலைகீழாகிவிடும்.. அல்லது நடந்தது அத்தனையும் தவறு என்று உச்சநீதிமன்றமே சொன்னாலும், நடந்தது அனைத்தும் ரிவர்ஸ் ஆகிவிடும்..

மகிழ்ச்சி
இந்த விஷயத்தில் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.. ஆனால், இந்த கட்சி ஒன்று சேர வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறார். நாங்கள் அனைவரும் அதைத்தான் விரும்புகிறோம்.. ஒற்றை தலைமையை தவிர்த்துவிட்டு, பழைய நிலைமையே நீடித்தால், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இந்த கட்சியை பலப்படுத்துவதற்கு, உழைப்பதற்கு ஓபிஎஸ் தயாராகவே இருக்கிறார்" என்று அந்த சேனலுக்கு பதில் சொல்லி உள்ளார் பிரபாகர்.












Click it and Unblock the Notifications