3 கட்டம் எல்லாம் போச்சா.. ஷாக்கான தென்மாவட்ட மக்கள்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. இப்படி ஆகுதே!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 3 கட்டமாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
நேற்று பெய்த கனமழை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நீரில் மூழ்கியது. மொத்தமாக பேருந்து நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதி நீரில் மூழ்கியது.

கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
வெள்ளம்: இந்த நிலையில் நேற்று சென்னையில் பெய்த மழையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.
அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையம் மூழ்கி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தி நுழைவு பகுதி மற்றும் உட்பகுதி நீரில் மூழ்கி உள்ளது.
3 கட்டம்: இதனால் இந்த பேருந்து நிலையத்தை திறப்பது மேலும் 3 மாதங்கள் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். அதாவது அடுத்த மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் 99 சதவிகித பணிகள் கிளாம்பாக்கத்தில் முடிந்துவிட்டன. அடுத்த 1 மாதங்களுக்குள் பேருந்து நிலையம் கண்டிப்பாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் இந்த மாதமே சோதனை ஓட்டமாக 2-3 மாவட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த மாதம் 10 - 15 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3 கட்டமாக இங்கே சேவைகள் தொடங்கலாம். அதாவது முதலில் தென் மாவட்டங்கள், அதன்பின் மேற்கு மாவட்டங்கள், அதை தொடர்ந்து வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கே தண்ணீர் தேங்கியதால் இவை எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு திறப்பு தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications