தேமுதிக - அதிமுக இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு? அத்தனை முறை கேட்டாரே பிரேமலதா? இவ்வளவு சீட்தானா?
சென்னை: அதிமுக - தேமுதிக இடையே, இன்றைய தினம் தொகுதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வருகிற 17ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதி செய்து வருகின்றன.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன..

எல்லா தமிழக கட்சிகளுமே தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகயில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறார்கள். ஆனால், அதிமுக மட்டும் இன்னும் கூட்டணியையே இறுதி செய்யாமல் இருந்து வருகிறது.
விருப்ப மனுக்கள்: ஏற்கனவே தேமுதிகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், 3வது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவேயில்லை.. வடமாவட்டத்தில் தாங்கள் கேட்ட தொகுதியை ஒதுக்காததால், திடீரென பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டதாக காரணம் வெளியாகியிருந்தது. இதனால், தொகுதி பங்கீட்டிலும் இழுபறியும் நீடித்து வந்தது.
இதற்கு நடுவில் விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு, தேமுதிக கூட்டணியை இறுதி செய்யலாம் என்று அதிமுக முடிவெடுத்தது. தற்போது, தேமுதிகவை அழைத்து, 3 கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்த தயாராகிவிட்டதாம்... கடந்த சில நாட்களாகவே, பாமகவுடனான ரகசிய பேச்சுவார்த்தையை அதிமுக மேற்கொண்டதாகவும், ஆனால், பாமகவின் தொகுதி நிபந்தனைகளை அதிமுகவால் ஏற்க முடியாமல் போனதால், பாமகவுடனும் இழுபறி நீடித்து வந்ததாக தெரிகிறது.
பாமக : பாமகவுக்காகவே, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை துவங்காமல் தாமதித்ததாம் அதிமுக.. இதற்கு காரணம், தேமுதிக - பாமக இரு தரப்புமே வடமாவட்டத்தை குறி வைத்தே தொகுதிகளை கேட்கிறார்களாம்..
இரு தரப்புமே ராஜ்ய சபா சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.. எனினும், பாமகவின் நிபந்தனைகளை ஏற்க முடியாததாலும், அவர்களுடனான கூட்டணியில் முடிவு எட்டாததாலும், தற்போது தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையை துவங்க உள்ளதாக சொல்கிறார்கள்.
திடீர் மாற்றம்: இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. பாமக வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ள பாஜக, அதே நேரத்தில் தேமுதிக வைத்த நிபந்தனைகளை ஆரம்பத்திலிருந்தே ஏற்கவில்லையாம். அதனால்தான், அதிமுகவுடனேயே கூட்டணி என்ற முடிவுக்கு தற்போது தேமுதிக வந்துள்ளதாம்.
7 + 1 சீட்களை தேமுதிக கேட்டுவந்த நிலையில், இப்போது வெறும் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தெரிகிறது.. சீட் விஷயத்தில்கூட முன்னேபின்னே பேசிக்கொள்ளலாம், ஆனால், மேல்சபை சீட் கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக அஏற்கனவே சொன்னதால், இப்போதும் அதே முடிவில் உள்ளதாம்.
அப்படியானால், ஒரு மாநிலங்களவை எம்பி சீட், 5 மக்களவை தொகுதிகள் வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய தொகுதிகளை வழங்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியிருக்கிறாராம்.. இதில், மக்களவை தொகுதிகளில் இடங்களை குறைத்துக்கொண்டு மற்றவற்றை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக இருப்பதால்தான், தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது.
சுமூக முடிவு: அந்தவகையில், இன்று காலையில், அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது. எனினும், இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதற்கு பிறகே 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்திட உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எப்படி பார்த்தாலும், பாமகவுடனான கூட்டணி அமைக்க முடியாத சூழலில், தேமுதிகவின் தொகுதிகளுக்கு, ஏறக்குறைய அதிமுக "ஓகே" சொல்லிவிடுவதால், தேமுதிக தரப்பு ஓரளவு நிம்மதியில் இருக்கிறதாம்.
பாமக: கடைசிவரை அதிமுக கூட்டணிக்குள் பாமக வராத பட்சத்தில், இனி பாஜகவை விட்டால் அக்கட்சிக்கும் வேற ஆப்ஷன்களும் இல்லாமல் போய்விடும்... என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications