வந்துவிட்டது வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை.. முதல் சேவை எங்கிருந்து எங்கே செல்லும்? வெளியான அறிவிப்பு
சென்னை: இந்திய ரயில்வே 2024 மார்ச்சுக்குள் வந்தே பாரத் ரயில்களுக்கு ஸ்லீப்பர் கோச்சுகளை அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வருகின்றன. இந்திய ரயில்வே மார்ச் 2024 இல் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தொடங்க உள்ளது.
டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா ஆகிய ரூட்டில் முதல் கட்டமாக இந்த ஸ்லீப்பர் ரயில்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதமே இதற்கான சோதனை ஓட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கட்டுமானம் தீவிரமாக நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் ஹிட் அடித்த நிலையில் அதில் ஸ்லீப்பர் கொண்டு வர உள்ளனர். அதிக கட்டணத்தில் மக்கள் சொகுசாக செல்லும் வகையில் இந்த ஸ்லீப்பர் ரயில்களை கொண்டு வர உள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் சாதாரண ரயில் வேறு வந்துள்ளது.. அந்த சாதாரண ரயிலுக்கு இடையில்தான் தற்போது அதிரடியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போதே அது ஸ்லீப்பர் ரயிலாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது இதன் கட்டுமானம் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இத்தனை நாட்களுக்கு பின் மீண்டும் ஸ்லீப்பர் செல் கட்டுமான விறுவிறுப்படைந்து உள்ளது. இந்த கட்டுமானம் முடிந்ததும் திருநெல்வேலி ரயிலில் ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் படுக்கை ரயில்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2024ல் இந்த ரயில் அமலுக்கு வர உள்ளது. இந்த ரயிலின் உட்புற புகைப்படம் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க வெள்ளையாக நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னலுடன் ஏசி வசதியுடன் இந்த ரயிலின் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று படுக்கை வரிசை கொண்ட பெட்டி, 2 பெட்டி கொண்ட படுக்கை வரிசை என்று இரண்டு விதமான படுக்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உள்ளே டிஜிட்டல் போர்ட் வைக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்க்க விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் கோச் போல இருக்கும் இந்த ரயிலின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முக்கியமான 5 சேவைகள்: வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையில் முக்கியமாக 5 வசதிகள் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
🚨 Vande Bharat train sleeper coach render. (📸 - tg situ) pic.twitter.com/8ibk6FWsic
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 15, 2023
1) மேல் பெர்த்தில் ஏறுவதற்கு வித்தியாசமான படிகள். கம்பிகள் இல்லாமல் அழகான படிகள்..
2) தானியங்கி கதவுகள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் கேபின் விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் கேபின் விளக்குகள் கொண்டு வரப்பட உள்ளன.
3) தற்போதைய ராஜதானி ரயில்களை விட குறைவான ஜெர்க் மற்றும் சத்தம் கொண்டவை. உள்ளே இருக்கும் போது பயணிப்பதே தெரியாத அளவிற்கு நவீனமாக பயணம் இருக்கும்.
4) Vacuum கழிப்பறைகள், டிஜிட்டல் கதவுகள் இருக்கும் . இதனால் கழிப்பறை சுத்தமாக நாற்றம் இன்றி இருக்கும்.
5) உள்ளே சீட்டுகளை திறக்கும் பெர்த் வசதி புதுமையாக இருக்கும். பழைய முறை போல கொக்கி போட வேண்டியது இல்லை. இதனால் அதிக இடவசதி இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications