இந்த தேதியை குறித்து வச்சுக்கோங்க.. மகளிர் உரிமை தொகை.. நடக்க போகும் தரமான சம்பவம்.. தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும். அதன்படி இந்த மாதம் 28ம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி 45 நாட்கள் ஆகப்போகிறது. இதனால் முதல் நாள் - அல்லது அந்த முகாம் தொடங்கிய முதல் வாரம் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் பதில்களை பெறுவார்கள்.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்ற பதில் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் வரும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் விண்ணப்பத்தின் விலையை நீங்கள் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

இந்த உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் யார் யார் பயன்பெற முடியும், யார் யாருக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட தகவல்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாம்களில் சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவி கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மனுக்கள் மீதான செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

யாரெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியானவர்கள்?

சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள், நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இந்த உரிமைத் தொகை பெறத் தகுதியற்றவர்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறதி நோய், பார்க்கின்சன் நோய், தசைச்சிதைவு நோய், மற்றும் தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியம் பெறாத தகுதியுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும், 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: அடுத்தகட்ட நடவடிக்கை

மாநிலம் முழுவதும் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மேலும் பல பெண்கள் பயனடைய, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அரசு ஏற்கனவே வழங்கியுள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக சில விதிவிலக்குகளைச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+