மகளிர் உரிமை தொகை.. புதிய பயனாளிகள் சேர்ப்பு எப்போது? விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்? பின்னணி
சென்னை: மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் எப்போது சேர்க்கப்படுவார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
எப்போது: இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்க்க விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாம் வாரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 4ம் தேதி ரிசல்ட் வந்த பின் தேர்தல் விதிகள் தளரும். அதனால் அதற்கு பின்பே விண்ணப்பங்களை கொடுக்க முடியும். அதற்கு பின்பே விண்ணப்பம் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது,. அதேபோல் இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக பிளான்: ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு பின் மேலும் சிலருக்கு இந்த திட்டத்தில் பணம் வழங்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பின் புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், , குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. இப்போது 1 கோடியே 7 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
நீட்டிப்பு: இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கூட இது தொடர்பாக பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தில் பணம் கொடுக்க வேண்டும். 1.60 கோடி பேர் விண்ணப்பம் செய்தனர். 1.16 கோடி பேருக்கு இப்போது கொடுக்கிறோம். இதில் பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும் 2-3 மாதத்தில் கொடுப்போம். இப்போது தேர்தல் என்பதால் கடினம். ஆனால் கண்டிப்பாக தேர்தல் முடிந்ததும் பணம் கொடுப்போம். கவலை வேண்டாம், என்று உறுதி அளித்துள்ளார்.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications