அவசர அவசரமா மோடி அதை சொன்னாரே.. விஜயகாந்த்தையே "வட்டமிட்ட" பாஜக.. இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விருது அறிவித்திருந்தது மத்திய அரசு.. இந்த விருது எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, தேமுதிக விஜயகாந்த் மீது தனி பாசத்தை காட்டியது... நிறைய மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தது.. அதுவும் பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் என்றால், அலாதி ப்ரியம் உண்டு.. ஒருமுறை விஜயகாந்த்தின் கன்னத்தை தட்டி பிரதமர் பாராட்டியதை, தமிழகமே அன்று வியந்து பார்த்தது..

அதற்கேற்றவாறு, ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிகவை கைவிடாமல், பாஜக தன்னுள் இறுக்கி பிடித்து கொண்டது.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட, தேமுதிகவை மட்டுமாவது கூட்டணிக்குள் சேர்த்து கொள்ளும்படி, எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தலைமை பலமுறை வலியுறுத்தியதாம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்போது பிடிவாதமாக மறுத்துவிட்டாராம்.
கும்பாபிஷேகம்: இதற்கு பிறகு, விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு செல்ல சென்னைக்கு வர திட்டமிட்டிருந்தாராம் பிரதமர் மோடி. ஆனால், அந்த நேரத்தில் ராமர் கோவில் திறந்து கும்பாபிஷேகம் செய்கிற சூழலில், ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேதம் கற்றறிந்த ஆச்சாரியர்கள் மோடிக்கு அறிவுறுத்தினார்களாம்.
அதனால்தான், விஜய்காந்த் இறுதி சடங்கிற்கு வருவதை தவிர்த்த மோடி, சோஷியல் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவு செய்ததுடன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரையும் விஜயகாந்தின் இறுதிச்சடங்கிற்கு அனுப்பி வைத்திருந்தார்..
திருச்சி: இதற்கு பிறகு, திருச்சி விழாவுக்கு வந்திருந்த மோடி, விஜய்காந்த்தை அளவில்லாமல் புகழ்ந்து பேசியிருந்தார்.. அத்துடன், விஜயகாந்தை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் முக்கிய விருது ஒன்றை அறிவிக்க போவதாகவும் சஸ்பென்ஸ் தந்துவிட்டு போனார்.. அடுத்த நாளிலேயே விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது என்ற தகவல் வெளியானது.
அதாவது, பாஜக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வந்துவிட்டால், விஜய்காந்தின் மீது பாசம் கொண்ட நடுநிலை வாக்காளர்களும் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்று கூட்டணி கணக்கு போடப்பட்டது. ஆனால், பலநாள் இழுபறிக்கு பிறகு, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிட்டுள்ளது.
பாஜக: இதற்கு முன்பு பாஜகவை, தேமுதிக கடுகளவுகூட விமர்சித்தது கிடையாது.. இந்த முறை பிரச்சாரத்தில், திமுகவை போலவே, பாஜகவையும் இழுத்து கொண்டுவந்து தேமுதிக விமர்சித்திருந்ததை தமிழக மக்கள் உற்று கவனித்தார்கள். இப்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் ரிசல்ட்டுக்காக தமிழகம் காத்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் மத்திய அரசு சார்பில் விருது விழா நடந்துள்ளது... எனவே, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விருது வழங்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்ப்பு: ஆனால், டெல்லியில் நடந்த விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. விஜயகாந்த் இறந்ததுமே, சூட்டோடு சூடாக விருது அறிவிக்கப்பட்டு, ஏன் இப்போது வழங்கவில்லை என்ற சந்தேகம் தேமுதிகவினர் மத்தியில் எழுந்துள்ளது..
இதனிடையே, அடுத்து நடைபெறும் விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் கட்டாயம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications