சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ரகசிய பேச்சு".. ஹோட்டலில் ரூம் போட்டு பேசினாங்களாமே.. யோசனையில் மா.செ.க்கள்.. அதிமுகவில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுக்குள் மறுபடியும் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம்.. இதனால் மாவட்ட செயலாளர்கள் உச்சக்கட்டமாக குழம்பி போய் தலையில் "கை" வைத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே, திமுகவைவிட அதிமுகவில்தான் பரபரப்பு அதிகமாக காணப்படுகிறது.. அதிமுகவின் தொடர் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

இதனால் சசிகலா வந்தால்தான் கட்சி இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்று முக்கிய நிர்வாகிகளே வாய்விட்டு சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. மற்றொரு பக்கமும் ஒற்றை தலைமை என்ற முழக்கமும் எதிரொலித்து வருகிறது..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், சசிகலாவை மட்டும் சேர்க்க கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.. சொந்த தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதை பார்த்தால், ஓபிஎஸ்ஸும் சசிகலா குறித்து எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்க தற்போது வரை தயாரில்லை என்றே யூகிக்க முடிகிறது.. ஆனால், சசிகலா என்றாலே டென்ஷனாகி கொதித்து கொண்டிருந்த சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றோர் சத்தமின்றி கப்சிப் ஆகிஉள்ளதும் எடப்பாடிக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

நிசப்தம்

நிசப்தம்

ஒருவேளை திமுகவின் கைது நடவடிக்கை பாய உள்ளதால், இந்த நிசப்தமா? அல்லது சசிகலாவுக்கான சிக்னலா? என்று தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் சசிகலா எடுத்து கொண்டுதான் இருக்கிறாராம்.. இதற்காகவே ஒரு டீமை அனுப்பி மறைமுக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வைத்து வருவதாக செய்திகள் கசிந்து கொண்டே இருக்கிறது.

 அதிருப்திகள்

அதிருப்திகள்

இதனிடையே, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்களும், அதிருப்திகளும் அதிகமாகி கொண்டே வருகிறது.. தன்னை வழக்கம்போல், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்பன போன்ற சந்தேகங்கள் ஓபிஎஸ்ஸுக்கு நிறையவே எழுந்துள்ளன.. அதனால்தான், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, அவரது சொந்த மாவட்டமான தேனியில் தீர்மானம் நிறைவேற்ற செய்ததாகவே கருதப்பட்டது.

 எடப்பாடி வலியுறுத்தல்

எடப்பாடி வலியுறுத்தல்

இதேபோன்ற தீர்மானங்களை பல மாவட்டங்களில் நிறைவேற்றும்படி, மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த விஷயம் தெரிந்து எடப்பாடி தரப்பும் களமிறங்கி விட்டதாம்.. "கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுப்போம்" என்று மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும்படி, எடப்பாடியின் ஆதரவாளர்கள், மாவட்ட செயலர்களிடம் சொல்கிறார்களாம்..

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இப்படி 2 பேருமே சொல்வதால், இவர்களில் யார் பேச்சை கேட்பது என்ற குழப்பம் மாவட்ட செயலர்களுக்குள் ஏற்பட்டுள்ளதாம்.. யாரை எதிர்ப்பது, யாரை ஏற்பது என்பது தெரியாமல் அமைதி காத்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், 2 நாளைக்கு முன்பு, சென்னையில் மாஜிக்கள் வைத்திலிங்கம், செங்கோட்டையன் போன்றோர் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசியதாக தெரிகிறது.. இவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.. ஆனால் மறுநாளே மறுபடியும் ஓபிஎஸ்ஸை, கேபி முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் ரகசியமாக கூடி பேசியிருக்கிறார்கள்..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இவர்கள் இப்படி என்றால், இந்த விஷயம் தெரிந்து எடப்பாடியும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினாராம். எனினும், சீனியர் தலைகளே இப்படி கூடி பேசுவதால்தான் பிரச்சனை இன்னும் தீராமல் உள்ளது, பேசாமல் அனைவரின் கூட்டி விவாதித்து, அவர்களின் கருத்தையும் கேட்டால்தான், இந்த விவகாரத்துக்குமுடிவு கிடைக்கும்.. அதுவரை, மாஜிக்கள் கூடிகூடி பேசி கொண்டே இருக்க வேண்டியதுதான், பிரச்சனையும் தீராமல் நீண்டுகொண்டே போக வேண்டியதுதான் என்று சலித்து சொல்கிறார்கள் அதிமுகவினர்..!

English summary
When will the solution be found in the AIADMKs local politics and whats edapadis next plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X