பழைய பென்ஷன்.. தமிழ்நாட்டில் எப்போ அமலுக்கு வரும்? அரசு ஊழியர்கள் குஷி.. ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள இப்போது குழுக்கள் அமைக்கப்பட்டாலும் இந்த வருட கடைசியிலேயே அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மற்ற பல சலுகைகள், பல கோரிக்கைகள் ஏற்பு என்று தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bonus dearness allowance

அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலுக்கு 2-3 மாதங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வரலாம். அதாவது இந்த வருட கடைசியில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் காரணமாக கடுமையான நிதி இழப்புகள் தமிழக அரசுக்கு ஏற்படும்.

இதை எல்லாம் கணக்கில் கொண்டு.. நிதி இழப்புகளை குறைக்கும் வகையில் திட்டத்தில் சில மாற்றங்களை செய்த பின்.. இந்த திட்டத்தை அதன்பின் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறதாம். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு அதிமுக, பாஜகவுக்கு கிடைத்தது. அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளை அளிக்கும் அரசு ஊழியர்கள் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, பாஜகவிற்கு சென்றது. இதை மனதில் வைத்தே அரசு ஊழியர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம்.

பழைய ஓய்வூதியம்

சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இது தொடர்பாக ஆய்வு பணிகளை செய்து வருகிறது.

கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையிணையும். பணியளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+