பட்ட பாடெல்லாம் போச்சா.. அன்று கனிமொழி மூலம் "ரூட் கிளியர்" செய்த டெல்லி.. இப்ப லிஸ்ட் பெருசா போகுதே
தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்ற சிக்கல் இன்னமும் நீடித்து வருகிறது
சென்னை: தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் யார் என்பதில் பலமுனை போட்டி துவங்கி உள்ளது. ஆனால், அதில் ஒருவருக்கு மட்டும் நிச்சயம் அந்த பதவி கிடைக்காது என்று அடித்து சொல்கிறார்கள்.. யார் அவர்?
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற எம்எல்ஏ விஜயதாரணியும், எம்பி ஜோதிமணியும் கச்சைக் கட்டி வருகிறார்கள்.. ராகுல்காந்தியின் குட் புக்கில் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி காய்களை வேகமாக நகர்த்துகிறார் ஜோதிமணி..
"அதிகபட்சம் 3 மாதம் தான், அழகிரி மாற்றப்படுவார், நான் தான் அடுத்த தலைவர்" என்று சக காங்கிரஸ் நண்பர்களிடம் சொல்லியும் வருகிறாராம் ஜோதிமணி...

விஜயதாரணி
இவருக்கு போட்டியாக, விஜயதாரணியும் களத்தில் குதித்துள்ளார்.. தன்னுடைய சீனியாரிட்டியை பயன்படுத்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மூலமாகவும், தலைவர் பதவிக்கு மூவ் செய்து வருவதாக தெரிகிறது.. இப்படி 2 பெண்களும், தலைவர் பதவி ரேசில் முந்திவரும்நிலையில், காங்கிரஸ் மேலிடம் இதுகுறித்து என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை.. அதைவிட முக்கியம், திமுக என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.

சிதம்பரம்
வழக்கமாக, மாநில தலைவர்களை தங்களின் விருப்பத்தின்படி காங்கிரஸ் மேலிடம் நியமித்தாலும், தன்னுடைய கூட்டணி கட்சி தலைவரான திமுக தலைமையின் விருப்பத்தை பொறுத்தே சமீபகாலங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை நியமித்து வருகிறது... மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டவர்தான் கேஎஸ் அழகிரி.. அன்று சிதம்பரத்தின் சிபாரிசில் அழகிரியை மாநில தலைவராக நியமிக்க சோனியா முடிவெடுத்தபோது, திமுக தலைமையின் விருப்பத்தையும் கேட்டறிந்தார் சோனியா காந்தி..

அறிவாலயம்
பிறகு, கனிமொழி மூலமாக, அறிவாலயத்தின் விருப்பத்தைக் கேட்க, திமுகவும் "ஓகே" என்று சொன்னபிறகுதான் அழகிரியை நியமித்தார் சோனியா... இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவை,தேர்தல் கால பேச்சுவார்த்தையில் "காண்ட்ரவெர்ஸியை " உருவாக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும், திமுக தலைமையை காயப்படுத்தாமல் சாதுர்யமாக பேசும் தகுதிப்பெற்றவராக இருக்க வேண்டும் என்பதில் சோனியாகாந்தி தெளிவாக இருந்தார்.. அதற்கேற்பத்தான் மாநில தலைவரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்...

சீட் ஷேரிங்
அந்த வகையில், இப்போது அழகிரி மாற்றப்பட்டாலும், புதிய தலைவரை நியமிப்பதற்கு முன்பு, நியமிக்கவிருக்கும் நபர் திமுகவுக்கு ஓகேவா? என்று ஆலோசித்துத்தான் தேர்வு செய்யப்படுவார். அதனால், ஜோதிமணிக்கு வாய்ப்பு கிடையாது என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள்... இதற்கு காரணம், ஆளும் தரப்புடன் ஜோதிமணி உறவு சுமூகமாக இல்லை.. அதாவது, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கரூர் எம்பியாக வெற்றிப்பெற்ற ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அழுத்தமான நட்பு இருந்தது... ஒன்றரை வருட காலம் நீடித்த அந்த நட்பு இப்போது டமார் என உடைந்துவிட்டது.

ஏழாம்பொருத்தம்
ஜோதிமணிக்கும் செந்தில்பாலாஜிக்கும் இப்போது வரை ஏழாம் பொருத்தம்தான். அதனால், ஜோதிமணியை நியமிப்பது பற்றி திமுக தலைமையிடம் காங்கிரஸ் மேலிடம் கருத்துக் கேட்டால், செந்தில்பாலாஜியிடம் கலந்தாலோசித்தான் திமுக தனது முடிவை தெரிவிக்கும்... செந்தில்பாலாஜியோ, ஜோதிமணிக்கு ஆதரவாக எப்படியும் சொல்ல மாட்டார் என்றே தெரிகிறது.. ஜோதிமணி காங்கிரஸ் தலைவரானால், கரூர் மாவட்டத்தில் தனக்கு எப்படியும் தலைவலிதான் கொடுப்பார் என்பதும், திமுக தலைமைக்கு சரிசமமாக உட்கார்ந்து தேர்தல் சீட் ஷேரிங் பேசும்போது அவரது குரல் வேறு மாதிரி ஒலிக்கும் என்பதும் செந்தில்பாலாஜிக்கு நன்றாகவே தெரியும்.

குதிரை கொம்பு
அதனால், திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்லி தடுத்து விடுவார்.. ஜோதிமணியின் ஆசையும் நிறைவேறாது. ஒருவேளை, திமுக கூட்டணியை விட்டு, காங்கிரஸ் வெளியேறினாலோ அல்லது வெளியேற்றப்பட்டாலோ அப்போது வேண்டுமானால் ஜோதிமணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். மற்றபடி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் வரையில் ஜோதிமணிக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்புதான். தற்போதைய நிலவரப்படி, சமீபகாலமாக அமுங்கிக் கிடந்த செல்லக்குமாரின் பெயர் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்திருக்கிறது.

தவிடுபொடி
அந்தவகையில், செல்லக்குமார் எம்பி, கார்த்தி சிதம்பரம் எம்பி, விஷ்ணுபிரசாத் எம்பி, ஜெயக்குமார் எம்பி, விஜயதாரணி எம்எல்ஏ ஆகியோர் ரகசியமாக முயற்சித்து வருகிறார்கள். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டதில் இருந்தே, உறுதுணையாக இருந்து, குறிப்பாக, தென்மாநிலங்களில் ராகுலின் நடைபயணத்தில் ஜோதிமணியின் பங்கு மிக முக்கியமாக இருந்து வந்த நிலையில், இப்போது எல்லாமே தவிடுபொடியாகிறதோ என்று நொந்து கொள்கிறார்கள் ஜோதிமணி ஆதரவாளர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications