புஸ்ஸாயிடுச்சு மொத்தமும்.. தமிழக "தலைவரை" மாற்றுகிறது டெல்லி.. விரைவில் வருது அறிவிப்பு.. ஓ, "அவரா"
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்பான சில பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.. அந்தவகையில், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டுராவ், கர்நாடக அமைச்சரானதும் மேலிட பொறுப்பாளர் பதவியை கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இப்போது வரை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது.
பிரியங்கா காந்தி: இந்த நிலையில்தான், திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த சோனியாவும், பிரியங்காவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில், தலைவர் மாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன. அப்போது, தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக பிரியங்கா மேடத்தை நியமிக்க வேண்டும் என்கிற குரலும் ஒலித்தது.
அதற்கேற்ப கூட்டத்தில் பேசிய பிரியங்கா, "இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவேன். தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காக நானும் ராகுலும் உறுதுணையாக இருப்போம்" என்று கூறியிருந்தார்.
சோனியா காந்தி: இதையடுத்து, மேலிட பொறுப்பாளர் பதவி குறித்து, 2 விதமான கருத்துக்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இதுகுறித்த ஸ்பெஷல் தகவல் ஒன்றுதான் நமக்கு கிடைத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் காங்கிரசுக்கு லோக்சபா எம்பிக்கள் 8 பேர் இருக்கின்றனர். இதில் 4 எம்.பிக்கள், சோனியாவுக்கும், கட்சி தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.
அதாவது, தலைவர் மாற்றப்படும்போது , தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக பிரியங்காவை நியமியுங்கள். அவர் நியமிக்கப்பட்டால் தமிழக காங்கிரசில் நடக்கும் பல தவறுகள் தடுக்கப்படும்... கட்சி வளர்ச்சிக்காக உண்மையாகவே உழைப்பார்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனராம். ஆனால், இந்த கோரிக்கை, எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
வாய்ப்பே இல்லை: காரணம், கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்காவை, ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்பே இல்லை. செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரைத்தான் நியமிக்க இருக்கிறார்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரும் புதிய மேலிட பொறுப்பாளரும் நியமிக்க மேலிட முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசியிருக்கிறார் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.. அப்போது, மாநில தலைவரை உடனே மாற்றுங்கள் என்று வலியுறுத்தினாராம்.
"சில மாதங்களுக்கு முன்பு மாநில தலைவரை மாற்றியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியபோது, 5 மாநில தேர்தல் முடியட்டும் என கார்கே சொல்லியிருந்தார்.. இப்போது நாடாளுமன்ற தேர்தலே நெருங்கிவிட்டது.. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை முன்னெடுப்பதற்கு குறைந்த பட்சம் 5 மாத காலமாவது தேவை. அதனால் தலைவரை உடனடியாக மாற்றுவது அவசியம் என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்துள்ளாராம் ப.சிதம்பரம். இதையடுத்து தமிழக காங்கிரஸில் விரைவில் ஒரு அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
கடந்த ஒரு வருட காலமாகவே, தமிழக தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே, டெல்லிக்கு சென்ற பல தலைவர்கள், தலைவர் கார்கேவை சந்தித்து புகார்களை அடுக்கி வந்தனர்.
பின்னடைவு: குறிப்பாக, "கட்சியை சாதி சங்கமாக நடத்துகிறார் அழகிரி.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் தலைவர் பதவியில் இருந்தால் கட்சிக்குள் அதிருப்திகளும் ஒத்துழையாமையும்தான் அதிகரிக்கும். அது தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமியுங்கள். கட்சியை ஆரோக்கியமாக புதிய தலைவர் கொண்டு செல்ல நேரம் சரியாக இருக்கும் என்றெல்லாம் புகாராக கொண்டுசென்றுள்ளார்.
இதற்கு பிறகு, தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி ப.சிதம்பரத்திடம், கார்கேவும் கருத்து கேட்டதாக தெரிகிறது. அதற்கு சிதம்பரம், "துடிப்பு மிக்கவர்களாக பார்த்து நியமித்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று கருத்து சொன்னாராம்..
எதிர்பார்ப்பு: தற்போதும் இதே கோரிக்கை வலுத்து வருவதாலும், தேர்தல் தேதி நெருங்கி வருவதாலும், புதிய தலைவர் குறித்த அறிவிப்பை டெல்லி மேலிடம், விரைந்து எடுக்கும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications