இன்னும் முடியலை.. நிலவில் தூங்கும் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா? இஸ்ரோ தலைவர் சோமநாத் குட்நியூஸ்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்த விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர். தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் 2வது இன்னிங்ஸை தொடங்குமா? என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய விண்வெளி துறையில் மகத்தான நாளாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 22ம் தேதி அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது தான்.

கடந்த மாதம் 22ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரின் இதயப்பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறிய நிலவில் இறங்கியது. அதோடு நிலவின் மேற்பரப்பின் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோவை பதித்தது.
இதன்மூலம் நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியா தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு இந்த 3 வல்லரசு நாடுகளும் அஞ்சி நடுங்கிய நிலையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கருவிகள் பல ஆய்வுகளை செய்தன.
ஆக்சிஜன் உள்பட 8 தனிமங்களை ரோவர் கண்டறிந்தது. அதோடு நிலவில் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு கருவியில் பதிவானது. இதுமட்டுமின்றி நிலவின் மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் ரோவர் தனது கேமரா மூலம் படமெடுத்து விக்ரம் லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் லேண்டர், ரோவர் ஆகியவை அதில் உள்ள சோலர் பேனல்கள் மூலம் சூரியஒளியை பெற்று செயல்படும்.
ஆனால் நிலவில் 14 நாளுக்கான இருள் சூழ்ந்ததால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் செயல்படாமல் வைக்கப்பட்டது. தற்போது அங்கு சூரியஒளி பட தொடங்கி உள்ளதால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை சிக்னல் கிடைக்காத நிலையில் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். கடந்த 22ம் தேதி முதல் விக்ரம் லேண்டர், ரோவருக்கு மறுபிறவி கொடுக்கும் செயலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்பாட்டு வருமா? இல்லையா? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோமநாத் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இன்னும் சிக்னல் என்பது கிடைக்கவில்லை. ஆனால் சிக்னல் என்பது வராது என கூற முடியாது. ஏனென்றால் இன்னும் காலஅவகாசம் உள்ளது. நிலவில் மொத்தம் 14 நாட்கள் பகல் பொழுது இருக்கும்.
தற்போது சூரியஒளி நிலவின் மேற்பரப்பில் விழுந்துள்ளது. தொடர்ந்து வெப்பநிலை என்பது அதிகரித்து செல்லும். இதனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் வெப்பமடைய வாய்ப்புள்ளது. இதனால் 14வது நாளில் கூட விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பாட்டு வரலாம். இருப்பினும் இது எப்போது நடக்கும் என்பதை உறுதியாக கணித்து கூற முடியாது.
மேலும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் 2வது இன்னிங்ஸை தொடங்கும்போது இன்னும் பல நன்மைகள் இருக்கும். முதலில் செய்த ஆய்வை போல் இன்னும் நாம் மேற்கொள்ள முடியும். மேலும் ChaSTE கருவி மூலம் வேறு இடத்தில் ஆய்வு செய்ய முடியும். இதன்மூலம் புதிய தரவுகள் நமக்கு கிடைக்கலாம். இதன்மூலம் நிலவின் மேற்பரப்பில் பல இடங்களில் ஆய்வு செய்யலாம். இது நிலவின் மேற்பரப்பு குறித்து அதிகமாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது'' என்றார்.

நிலவின் தென்துருவத்தை பொறுத்தமட்டில் வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி அதிகமாக இருக்கும். இந்தியாவில் ஒரு நாள் என்பது 12 மணிநேரம் பகலாகவும், 12 மணிநேரம் இரவாகவும் இருக்கும். ஆனால் நிலவை பொறுத்தமட்டில் 28 பூமி நாட்கள் தான் அங்கு ஒருநாளாகும். அதாவது 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இரவில் அதிகபட்சமாக -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்.
இந்த குளிரில் சோலார் பேனல்களுடன் செயல்படும் ஆய்வுக்கருவிகள் செயல்பட வாய்ப்பில்லை. இதனால் தான் லேண்டர், ரோவர் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது 2வது இன்னிங்ஸை தொடங்கும் வகையில் விக்ரம் லேண்டர், ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வரும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தை பொறுத்தமட்டில் விக்ரம் லேண்டர் ரோவர் ஆய்வு காலம் என்பது 14 நாட்கள் தான். அதனை இரண்டும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. தற்போது 2வது இன்னிங்சை இரண்டும் தொடங்கினால் அது நமக்கான போனஸ் பாயிண்ட் போன்றது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications