சல்லி சல்லியா நொறுக்கி.. கார்த்தி சிதம்பரம் என்ன இப்படி சொல்லிட்டாரே.. திரும்பி பார்த்த "கதர்கள்"
பாஜக அளவுக்கு காங்கிரஸ் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்
சென்னை: 5 மாநிலங்களின் தேர்தல் ரிசல்ட் தந்த தோல்வி, தேசிய கட்சியான காங்கிரஸை யோசிக்க வைத்துள்ளது.. அதனைதான் அக்கட்சி தலைவர்கள் தங்கள் பேட்டிகளில் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் ரிசல்ட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி எழவே இல்லை.. படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சி தொண்டர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சி தேய்ந்து போக என்ன காரணம்? உட்கட்சி பூசல் காலம் காலமாக அக்கட்சியில் இருந்தாலும், தமிழகத்தை தவிர நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் கூட்டணி விஷயத்தில் தவறான முடிவுகளே பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.

பிரச்சாரங்கள்
பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும் எப்போதுமே பாஜகவை சாடியும், விமர்சித்தும் பேசப்படுகிறதே தவிர, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தலைவர்கள் தவறிவிடுவார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது.. இதைதவிர காங்கிரஸ் கட்சிக்கென்று நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை.. பாஜகவுக்கு மோடி, அமித்ஷா, யோகி, ஸ்ம்ரிதி இரானி இப்படி எத்தனையோ பேச்சாளர்கள் மக்களை கவர்ந்துவிடும்போது, காங்கிரஸ் மட்டும் ஏன் இந்த விஷயத்தில் கோட்டை விடுகிறது என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

பிரியங்கா காந்தி
எல்லாவற்றிற்குமே ராகுலையும், ப்ரியங்காவையுமே நம்பி இருக்க வேண்டியதாகிவிடுகிறது... ராகுல் இன்னும் ஆழமாக கட்சி செயல்பாட்டில் இறங்க வேண்டியது உள்ளது என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகமாகி உள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தேசிய கட்சியானது, தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பாஜகவுக்கு பலமாகி கொண்டிருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

நேர்மை
கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, மூத்த தலைவர் பரூப் அப்துல்லா முக்கிய கருத்தை ஒன்றை தெரிவித்திருந்தார்.. அதில், "காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது.. இதை நான் நேர்மையாகவே சொல்கிறேன். நாட்டை காப்பாற்ற விரும்பினால் காங்கிரஸ் எழுந்து வலுவாக நிற்க வேண்டும்... மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் கவனிக்க வேண்டும்... சும்மா வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது இதெல்லாம் நடக்காது" என்றார்.

கார்த்தி சிதம்பரம்
இப்போது 5 மாநில ரிசல்ட் வந்த நிலையில், அக்கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரமும் கிட்டத்தட்ட இதே கருத்தைதான் தற்போது சொல்லி உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார்.. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை.. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும்.. சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

பாஜக
நடந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்த்தபடி இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கும் தனி அரசியல் இலக்கணப்படி முடிவுகள் வந்துள்ளன. பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு, கட்டுமான வசதிகள் இல்லை. காங்கிரஸ் கட்சியை வலுவான அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதையே இந்த ரிசல்ட் காட்டுகிறது... காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, இது யதார்த்தமான உண்மை" என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications