காசேதான் கடவுளப்பா.. பாட்டாவே பாடிய டாக்டர் ஐயா.. அடடே சௌமியாவை பாருங்க.. அண்ணன்னு சொன்னதுமே அதிரடி
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி உட்பட அவரது மகள்கள் 3 பேரும் இன்று தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பிரதமர் மோடி: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமென ஏக்கம் உள்ளது. 3வது மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றியை பிரதமர் மோடி தொடர்வார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதாக புகார் வந்துகொண்டேயிருந்தாலும், அதிகாரிகள் இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
அரக்கோணம்: அரக்கோணத்தில்கூட பணம் பிடிக்கப்பட்டுள்ளது... ஆனால் நடவடிக்கை இல்லை. அதுவும், ஆளும் கட்சியினர் அதிகாரிகளை வைத்து கொண்டே பண பட்டுவாடா செய்திருக்கிறார்களாம்.. இதில் 99% அதிகாரிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.. வேட்பாளர் பணம் கொடுத்து வாக்கு பெற்றால் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பிறகு, அதே வாக்குச்சாவடி மையத்தில் தருமபுரி தொகுதியில் பாஜக-பாமக கூட்டணியில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌவுமியா அன்புமணி தன்னுடைய வாக்கினை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, மிக முக்கியமான நாள் இது. என்னுடைய ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பிறகு தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன்" என்றார்.
வெற்றி வாய்ப்பு: உடனே செய்தியாளர்கள் அவரிடம், "உங்கள் உடன்பிறந்த சகோதரர், உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா" என்று கேட்டார்கள்.. அதற்கு சௌமியா, "எல்லா தொகுதிகளிலும் என்னுடைய உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள்... நாங்கள் எல்லோருமே கடமையை கண்ணாக செய்து கொண்டு வருகிறோம்.. பெண்கள் எல்லாரும் என் மீது நிறைய அன்பு காட்டுகிறார்கள்.. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
அதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் வரும்... தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 3வது முறையாக மோடி பிரதமர் ஆவார். இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்கு, புதுச்சேரிக்கு மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வருவார், என்ற பெரும் நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
கடவுளுக்கு தெரியும்: தமிழகத்தில் நிறைய இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு டாக்டர் ராமதாஸ், "அது கடவுளுக்குதான் தெரியும். காசேதான் கடவுளடா. அந்தக்கடவுளுக்கும் அது தெரியுமடா... எனக்கு வந்த தகவல்படி நியாயமாகவே தேர்தல் நடைபெறுகிறது. மாலை வரை காத்திருப்போம்" என்றார் டாக்டர் ஐயா
ஆக, ராமதாஸ், அன்புமணி, சௌமியா என 3 பேருமே, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதுடன், மோடியே 3வது முறை பிரதமர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு போயிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications