Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிஞ்சிடுச்சோ".. திமுக ஓட்டை பிரிக்க நேரா "இங்கே" வந்துட்டாரே.. ராஜாவின் பார்வையில் "அந்த" தொகுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.. இதில் பாஜகவின் கவனம், நீலகிரியில் குவிந்து வருகிறது.. அதற்கான வியூகங்களும் அதிகரித்துள்ளது.. அப்படியானால், இதற்கு மாற்றாக திமுக என்ன செய்ய போகிறது?
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்பது என்று பாஜக பிளான் வைத்திருக்கிறது போலும்.. ஆனால், ஐபி ரிப்போர்ட்படி பாஜகவுக்கு சாதகமானது மொத்தம் 10 தொகுதிகள் என்கிறார்கள்.

இந்த 10 தொகுதிகளில் முதன்மையாக உள்ளது நீலகிரி.. இந்த பேச்சு அடிபட்டபோதே, எல்.முருகன், இந்த முறை எம்பி தேர்தலில் நீலகிரியில் போட்டியிட போவதாக பேச்சு அடிபட்டது.

Where is A raja going to go in the MP elections and What are TN BJPs strategies in Nilgiri constituency

தெலுங்கு : ஆனால், எல்.முருகன் பெயர் அடிபட்டபோதே, இவருக்கு போட்டியாக விபி துரைசாமியின் பெயரும் அடிபட்டது.. காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய மகனுக்கு கெங்கவல்லி தொகுதியை கேட்டிருந்தார் துரைசாமி.. ஆனால், அது கிடைக்கவில்லை.. அதனால், இந்த முறையாவது தன்னுடைய மகனுக்காக நீலகிரி தொகுதியை தர வேண்டும் என்று கேட்டதாக ஒரு தகவல் கசிந்தது.. எல்.முருகனும் துரைசாமியும் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் ஆவார்.. அத்துடன் இருவருமே ஒருவகையில் உறவினரும்கூட. அதனால், நீலகிரியை யாருக்கு தருவது என்று மேலிடம் குழம்புவதாக சலசலக்கப்பட்டது.

சமிக்ஞைகள்: எனினும் இந்த சலசலப்பெல்லாம், 2 மாதத்துக்கு முன்பு அதாவது, ஜேபி நட்டா, கோவை வந்தபோதே உதிர்ந்துபோய்விட்டது.. இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்று அண்ணாமலையும் நட்டாவிடம் எடுத்து சொல்ல, எல்.முருகன் நீலகிரியில் போட்டியிடுவதற்கான சமிக்ஞைகள் லேசாக அப்போது தென்பட்டன. நீலகிரியை பொறுத்தவரை, அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி கைப்பற்றினாலும், பாஜகவும் ஓரளவு வலுவாகவே உள்ளது..

டேன் டீ: கடந்த முறையே அதிமுகவிடம் நீலகிரியை கேட்டு வாங்கியிருந்தது பாஜக.. அதற்கு பிறகு, தொடர்ச்சியான களப்பணிகளையும் மேற்கொண்டு வந்தது.. சமீபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்று, இதனை உறுதியும் செய்திருந்தார். "உங்களால் டேன் டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், பேசாமல் அதை மத்திய அரசுக்கு விற்றுவிடுங்களேன்" என்று திமுக அல்லாமல், அதிமுகவையும் சேர்த்து அண்ணாமலை சீறியிருந்ததையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. . அப்போதுதான், நீலகிரியை இந்த முறை யாருக்கும் பாஜக விட்டுத்தராது என்பதும் நிரூபணமானது. இப்போது விஷயம் என்னவென்றால், நீலகிரியில் எல்.முருகன்தான் போட்டியிட போகிறார் என்பது கிட்டத்தட்ட கன்பார்ம் ஆகிவிட்டது.

ஹெத்தையம்மா: நீலகிரி மாவட்டத்தில், வருடந்தோறும் மொத்தம் 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடப்பது வழக்கம்.. இதில் மூலஸ்தானமாக விளங்குவது கோத்தகிரி பேரகனி ஹெத்தையம்மன் திருவிழாவாகும்.. இந்த திருவிழாவில் காணிக்கை செலுத்துவது என்பது மிக மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. இப்படி, காணிக்கை செலுத்துவது என்பது சாதாரண நிகழ்வு கிடையாது.. பொதுவாக, நீலகிரி தொகுதியில் எம்பி, எம்எல்ஏ, பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு முன்பாக, இப்படித்தான், இந்த ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு நேரடியாக பங்கேற்று காணிக்கை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், எல்.முருகனும் 2 மாதங்களுக்கு முன்பு வந்திருந்து காணிக்கை செலுத்திவிட்டு போனார்..

வலைவிரிப்பு: பாஜக இந்த அளவுக்கு நீலகிரியை விடாமல் பிடித்து கொண்டிருக்க காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 5,300 ஓட்டு வித்தியாசத்தில்தான், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் தோற்றுப்போனார். அதனால், மலைவாழ் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக அளவுக்கு அதிகமாகவே நம்புகிறாராம் எல்.முருகன். அதுமட்டுமல்ல, எல்.முருகன். நீலகிரி தொகுதியின் சிட்டிங் எம்பி-யான ஆ.ராசா சமீபத்தில், இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததால், நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டங்கள் வெடித்தன..

தகரும் கணக்கு: இந்து அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய இந்தப் போராட்டத்திற்கு நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் ஆதரவும் கிடைத்தது.. இதுவும் எல்.முருகனுக்கு புது தெம்பை தந்திருந்தது. இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், நீலகிரி மலைக்கே, வலையை விரித்துள்ளார் முருகன் என்கிறார்கள்.. அப்படியானால், ஆ.ராசா என்ன செய்ய போகிறார்? என்பதுதான் அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது. இங்குதான் திமுக புது வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.. தமிழகத்தில் உள்ள, 39 எம்பி தொகுதிகளில், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகை, நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் போன்ற 7 தொகுதிகள், ஆதிதிராவிடர்களுக்கான தனி தொகுதிகள் ஆகும்.. இதில், நாகை, தென்காசியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் எம்பிக்களாக இருக்கிறார்கள்..

Where is A raja going to go in the MP elections and What are TN BJPs strategies in Nilgiri constituency

கடந்த, 2019-ல் திமுக கூட்டணியில் அருந்ததியர் சமூக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் அதிக அளவு எண்ணிக்கையில் அருந்ததியர் சமூகத்தினர் போட்டியிட வாய்ப்புள்ள ஒரே தொகுதி நீலகிரி மட்டும்தான்.. அதனால்தான், ஆ.ராசா தொடர்ந்து இங்கு போட்டியிட்டு வருகிறார்.. எனினும், 7 தனி தொகுதிகளில் ஒன்றில் கூட, அருந்ததியர் வேட்பாளரை நிறுத்தாத நிலையில், இந்த விஷயத்தில்தான் திமுக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு போட்டியாக அருந்ததியர் சமூக வேட்பாளரை நிறுத்த திமுக யோசித்து வருவதாக சொல்கிறார்கள்..

வழக்கமாக பெரம்பலூரில் போட்டியிட்டு வந்த ராசா, அது பொது தொகுதியானதால்தான் நீலகிரிக்கு மாறினார். இந்த முறை நீலகிரியில் அருந்ததியரை நிறுத்த வேண்டும் என்று திமுக கணக்கு போடுவதால், அநேகமாக காஞ்சிபுரம் தொகுதியில் ஆ ராசா போட்டியிடலாமா என்று யோசித்து வருகிறாராம்.. ஒருவேளை காஞ்சிபுரம் இல்லாவிட்டால் திருவள்ளூர், விழுப்புரம் என மேலும் 2 ஆப்ஷன்களும் கையில் உள்ளதாக தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், பாஜகவுக்கு அதிமுக நீலகிரியை விட்டுக்கொடுத்து என்றும் தெரிகிறது.. பாஜக நீலகிரியில் போட்டியிடுவதானால், நீலகிரியில் திமுக வேட்பாளர் யார்? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுகவின் செல்வாக்கும் இங்கு குறை சொல்ல முடியாது.. ஆனால், உட்கட்சி பூசல்கள் அதிகம் என்பதால், இதுதான் பாஜகவுக்கு சாதகமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், பாஜகவை எதிர்க்கவும், அதிமுகவின் ஓட்டுக்களை திசைதிருப்பவும், பலம்வாய்ந்த வேட்பாளரையே திமுக மேலிடம் பரிசீலிக்கும் என்கிறார்கள்.. எப்படியோ, எம்பி தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கிவிட்ட நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில், தாமரைகள் இப்போதே 'அரும்ப' தொடங்கிவிட்டன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+