சேலத்தில் இருக்காரா? எடப்பாடி பழனிசாமி எங்கே? சென்னையில் ஆளையே காணோமாமே.. கிளம்பியாச்சு பஞ்சாயத்து
சென்னை: சென்னை மாநகரம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்திகள் வெளிப்பட்டு வருகிறது.
சென்னையை உலுக்கி எடுத்துவிட்டு போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்..
திமுக அரசு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கின்றன.,
"ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்" என்று இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாலும், விமர்சனங்கள் பெருகி வருகின்றன.
குற்றச்சாட்டுகள்: இதே குற்றச்சாட்டைதான், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முன்வைத்திருந்தார்.. "முறையான முன்னெச்சரிக்கை திட்டமிடல் இல்லாததால்தான் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது" என்று சாடியிருந்தார்.. அதுமட்டுமல்லாமல், பெருங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரண பொருள்களை வழங்கினார்.. செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,
"என்எல்சி நிறுவனத்திடம் ராட்சத மோட்டார்களை இப்பதான் வாங்க போகிறார்களாம்.. இவர்கள் என்னைக்கு மோட்டார் வாங்கி, என்றைக்குத் தண்ணீரை வெளியேற்றப்போகிறார்கள்? அதுவரை மக்கள் தண்ணீரில் அவதிப்பட வேண்டுமா? திட்டமிட்டுச் செயல்படவில்லை இந்த திமுக அரசு" என்று சாடியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி: ஆனால் அதோடு சரி.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுடன் சேர்ந்து உதவி செய்ய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஃப்ளைட் பிடித்துக் கொண்டு, சேலத்துக்கே சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது..
இதற்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது, அனைத்துக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி என பாரபட்சம் பாராமல் மக்களை மீட்கும் பணியிலும், அவர்களுக்கு தேவையான பணிகளை செய்வதிலும் அக்கறை செலுத்தினார்கள்.. ஆனால், நேற்று முன்தினம் ஒரே ஒரு நாள் மட்டுமே, வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கிய சென்று நிவாரண பணிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
விமர்சனங்கள்: நானும் தண்ணீரில் இறங்கி சென்றேன் என்பதை பதிவு செய்துவிட்டு, ஆளே காணவில்லையே? என்ற விமர்சனங்கள், ஓபிஎஸ் தரப்பிலிருந்து வலம்வர துவங்கி உள்ளன. இந்நிலையில், சேலம் மத்திய மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியை சரமாரி விமர்சித்துள்ளார்.
"பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை எதிர்க்கட்சி தலைவர் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வேட்டியை மடித்துக்கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சேலம் வந்துவிட்டார்.
நெருக்கடி: இந்த நெருக்கடி நேரத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது. எதிர்க்கட்சிதான் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும்... மக்களை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை.. எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே குறியாக உள்ளது என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு அதிமுக ஆதரவாளர்கள் பதிலடி தந்து வருகிறார்கள்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications