எடப்பாடிக்கு என்னதான் ஆச்சு? ஆளையே காணோமே.. சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது உடல்நிலை சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாக தொடங்கி உள்ளன.

சமீபத்தில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Where is Edappadi Palanisamy? What happened to his health?

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரிடம் புகார்: இதற்காக எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்தார். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பேரணி காரணமாக சென்னையில் அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலில் 12க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின் அவர் நடத்தும் மிகப்பெரிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது.

அழைப்பு - பங்கேற்கவில்லை: அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் முடிந்ததும் மாவட்ட அளவிலான போராட்டம் நடக்கும் என்று அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராய மரணங்களை எதிர்த்து மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முழுக்க இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. சேலத்தில் நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

வேறு மாவட்டங்களிலும் முக்கிய தலைவர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஆனால் போராட்ட நாளில் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. அவர் ஏன் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார். ஏன் செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறார்? : அதன்பின் இத்தனை நாட்களாக அவர் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறார். அறிக்கை மட்டுமே வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கியது.

Where is Edappadi Palanisamy? What happened to his health?

ஆனால் அதை பற்றி கூட எடப்பாடி பேட்டி அளிக்கவில்லை. . அவர் ஏன் வெளியே வரவில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலின்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு உடல் வலியும் கடுமையாக உள்ளது. இதனால் அவர் சிகிச்சை எடுப்பதற்காக ஓய்வு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

காலில் பாதிப்பு: அவருக்கு கால் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் காலில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு வெளிநாடு செல்ல வேண்டுமா என்று எடப்பாடி யோசிக்கிறாராம். கட்சி தனது கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், கோர்ட்டில் இன்னும் மேல்முறையீட்டு கேஸ்கள் நடக்கும் நிலையில் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று எடப்பாடி யோசிக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+