தூத்துக்குடி குஷி.. திருநெல்வேலிக்கு ஹேப்பி.. பாஜக நம்புவது இவரையா? மோடி வந்தப்போ "பிஸியா" ஓடினாரே?
சென்னை: நாடார் ஓட்டுக்களை குறிவைத்து பாஜக காய்நகர்த்த துவங்கி விட்டது.. ஆனால், இதன்காரணமாக, பாஜகவுக்கே ஒரு மெகா குழப்பம் ஏற்பட்டுள்ளது.. என்ன அது?
வரப்போகும் தேர்தலில் தென் மண்டலங்களில் கணிசமான ஓட்டுக்களை பெற வேண்டும் என்று பாஜக முடிவெடுத்துவிட்டது.. இதனால், தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வியூகங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில், தென் மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாய வாக்குகளையும், பாஜகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது..
திமுக அதிருப்தி: இதே குறிக்கோளை மையப்படுத்தியே திமுகவும் வியூகம் வகுத்தது. அதனால்தான், நாடார்சமுதாயத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியும், பிரபல பல் டாக்டர் ஒருவருக்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும் வழங்க திட்டமிட்டதாம். ஆனால், நிர்வாக ரீதியாக, அவர்களுக்கு பதவி தரமுடியாது என்பதால், மத்திய அரசு தரப்பில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்த வருத்தமும் பாஜக மீது நாடார் சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது. அதனால்தான், அந்த அதிருப்திகளையெல்லாம் ஓட்டுகளாக மாற்றவே, மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது பாஜக.. இதன் ஒருபகுதியாகவே, சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்ததாம். அந்தவகையில், முக்கிய புள்ளி ஒருவர் மூலம், தற்போது சரத்குமாரை கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளது பாஜக.
பாஜக விமர்சனம்: சமீபகாலமாகவே, பாஜகவை விமர்சித்து கொண்டிருந்த சரத்குமாரும், மெல்ல மெல்ல விமர்சிப்பதை குறைத்து கொண்டே வந்து, இறுதியில் நேற்றைய தினம் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
சரத்குமாரை பொறுத்தவரை, இந்த முறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி 2 தொகுதிகளை, பாஜகவிடம் கேட்டிருக்கிறாராம். ஆனால், இந்த 2 தொகுதிகளையும் பாஜக ஒதுக்குமா? என்று தெரியவில்லை.
கன்னியாகுமரி: காரணம், கன்னியாகுமரி தொகுதியை ஆர்எஸ்எஸ் மண் என்பார்கள்.. ஆர்எஸ்காரர்கள் வளர்த்தெடுத்த மண் ஆகும்.. இங்கு ஆர்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட வேட்பாளரையே நிறுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. அதனால்தான், விஜயதரணிக்கு கன்னியாகுமரியை ஒதுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சரத்குமாருக்கும் இந்த தொகுதியை ஒதுக்க நிச்சயம் வாய்ப்பிருக்காது.
எனவே, திருநெல்வேலியில் போட்டியிட சரத்குமார் ஆசைப்படுகிறாராம். இந்த திருநெல்வேலியிலும் இன்னொரு சிக்கல் முளைத்துள்ளது. காரணம், இந்த நெல்லையில் ஏற்கனவே, பாஜகவின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதற்கு ரெடியாகி வருகிறார்.
தேர்தல் பணிகள்: கடந்த மாதமே தேர்தல் பணிகளையும் இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்துவிட்டார். தேர்தல் ஆபீசையும் திறந்து வைத்துவிட்டார்.. போதாக்குறைக்கு மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகளையும் செய்து முடித்துவிட்டார்.
இது எல்லாற்றையும்விட, பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தியவர்களில் முதன்மையானவர் நயினார்தான்.. இவ்வளவும் செய்துவிட்டு, நயினார் காத்திருக்கும்போது, திடுதிப்பென்று வந்து, சரத்குமார் இந்த தொகுதியை கேட்பதால், பாஜக மண்டை காய்ந்து போயிருக்கிறதாம்.
விடை என்ன: அதனால் சரத்குமாருக்கு திருநெல்வேலியில் வாய்ப்பு தராமல், தூத்துக்குடியில் சீட் தரலாம் என்கிறார்கள்.. இதே தூத்துக்குடியில் சரத்குமார் போட்டியிட்டு தழுவிய நிலையில், மீண்டும் அங்கேயே சீட் தந்தால் ஏற்பாரா? திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் சூழலில், நாடார் சமுதாய மக்களின் வாக்குகளை அல்வாரா? எதுவுமே தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications