விருதுநகர் விருந்தாளி.. நாடார் ஓட்டை அள்ளும் பாஜக.. நயினாரை விடுங்க.. நடிகை ராதிகா சரத்குமார் எம்பி?
சென்னை: நாடார் ஓட்டுக்களை குறிவைத்து பாஜக காய்நகர்த்த துவங்கிவரும்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் வியூகமும் வேகமெடுத்து வருகிறது. அந்தவகையில் பல்வேறு யூகமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி கொண்டிருக்கின்றன.
வரப்போகும் எம்பி தேர்தலில், நாடார் ஓட்டுக்களின் வாக்குகளை குறிவைத்து திமுக தரப்பில் காய்நகர்த்தப்பட்டதாக தெரிகிறது. இதை மையப்படுத்தியே, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியும், பிரபல பல் டாக்டர் ஒருவருக்கு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும் வழங்க திட்டமிட்டதாம்.

நாடார் வாக்குகள்: ஆனால், நிர்வாக ரீதியாக, அவர்களுக்கு பதவி தரமுடியாது என்பதால், மத்திய அரசு தரப்பில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த வருத்தமும் பாஜக மீது நாடார் சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது. அதனால்தான், நாடார் சமூக மக்களின் அதிருப்தியை போக்கும் வகையிலும், தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும் வியூகங்களை முன்னெடுத்து வருகிறது தமிழக பாஜக..
அந்தவகையில், தென் மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாய வாக்குகளையும், பாஜகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது..
சரத்குமார்: எனவே, சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுக்குள் கொண்டுவந்துள்ளது.. சரத்குமாரை பொறுத்தவரை, இந்த முறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி 2 தொகுதிகளை, பாஜகவிடம் கேட்டிருக்கிறாராம்.
எனினும், இந்த 2 தொகுதிகளையும் பாஜக ஒதுக்குமா? என்று தெரியவில்லை. இதில், திருநெல்வேலியில் போட்டியிட சரத்குமார் விரும்புவதாக தெரிகிறது.
நயினார் நாகேந்திரன்: ஆனால், இந்த நெல்லையில் ஏற்கனவே, பாஜகவின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிட மும்முரமாகி கொண்டிருக்க கடந்த மாதமே தேர்தல் பணிகளையும் இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்துவிட்டார். தேர்தல் ஆபீசையும் திறந்து வைத்துவிட்டார்.. போதாக்குறைக்கு மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகளையும் செய்து முடித்துவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தியவர்களில் முதன்மையானவர் நயினார்தான்.. இவ்வளவும் செய்துவிட்டு, நயினார் காத்திருக்கும்போது, சரத்குமாருக்கு நெல்லையை ஒதுக்க வாய்ப்பில்லையாம். அதனால், விருதுநகர் தொகுதியை பாஜகவிடம் கேட்டு பெறலாம் என்கிறார்கள்.
விருதுநகர்: காரணம், காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதியை பாஜக ஒதுக்கினால், அங்கு ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்றும் யோசித்து வருகிறாராம் சரத்குமார்.. இதற்கு காரணம், விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தன்னுடைய சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார் சரத்குமார்..
இதைத்தவிர, அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்கவும் நிறைய எதிர்கால திட்டத்தையும் வகுத்து வைத்திருக்கிறாராம்.
இன்று முடிவு: அதனால், தனக்கு ஒரு தொகுதியை மட்டுமே பாஜக வழங்குவதாக இருந்தால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட செய்து, எம்பி பதவியையும் கேட்டு வாங்க போகிறாராம் சரத்குமார்.
எனவே, இது தொடர்பான தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளார்.. அதன்படி இன்றைய தினம், சென்னையில் ஆலோசனை கூட்டமும் நடக்க போகிறதாம். இந்த கூட்டத்தில்தான், எந்த தொகுதியில் போட்டி? யார் வேட்பாளர்? என்பதெல்லாம் தெரியவருமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications