முடிஞ்சதாமே.. "தலை"க்கு தில்ல பாருங்க, அவருக்கே தெரியாதாம்.. விழிக்கும் திமுக + அதிமுக.. தாமரை மலருதோ
சென்னை: கர்நாடக தேர்தலில் அண்ணாமலை படுபிசியாக இருந்தாலும், அவரை பற்றின செய்திகள் தமிழக அரசியலில் ஓயாமல் வட்டமடித்து கொண்டே இருக்கிறது.. அந்தவகையில், இப்போது ஒரு செய்தி உலா வருகிறது.
2024-ல் நடைபெற உள்ள எம்பி தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்றே தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் நிலையில், இந்த கூட்டணி இன்று மேலும் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியுடன் இன்னும் இணக்கமான போக்கை கையாளவில்லை என்றே தெரிகிறது.

கூட்டணி கன்பார்ம்: "பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து செயல்பட முடியாது, பாஜக தயவு அதிமுகவுக்கு தேவையாக இருக்கிறது" என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி சொல்லியிருந்தது, அதிமுகவினரிடையே கொந்தளிப்பை கிளப்பிவிட்டுள்ளது.. அதிமுக அல்லாத கூட்டணிக்கு அண்ணாமலை தயாராகிவருவதாகவும் தெரிகிறது.. அதற்காகவே, கட்சியை பலப்படுத்தும் நோக்கில், சில களையெடுப்புகளிலும் இறங்கி உள்ளதாக கடந்த ஒரு மாத காலமாகவே, தகவல்கள் வலம்வருகின்றன.

கள ரிப்போர்ட்: அதன்படி, கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்திருந்தார்.. அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு பாஜகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக முக்கிய தலைகள் சிலர் அணி திரட்டி வரும் நிலையில், அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற செய்தியும் கசிந்தது.. ஒருபடிமேலே போய், அண்ணாமலைக்குப் பதிலாக மறுபடியும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக்கப்படலாம் என்ற பேச்சும் கிளம்பியது..
ஆனால், அந்த வதந்திகளை எல்லாம் நொறுக்கித்தள்ளிவிட்டு, கர்நாடக தேர்தல் விஷயத்தில் அண்ணாமலை படுபிஸியாக இருக்கிறார்.. அதேசமயம், தமிழக களஅரசியலில் ஒருகண் அவருக்கு இருந்துகொண்டே இருக்கிறது.. இப்போது விஷயம் என்னவென்றால், நடக்க போகும் எம்பி தேர்தலில், கன்னியாகுமரியில் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று செய்திகள் கசிந்துவருகின்றன.. சில நாட்களுக்கு முன்பு, பொன்.ராதாவின் அதே குமரி மாவட்டத்தில், அண்ணாமலைக்கு ஆதரவுகள் போஸ்டர்கள் மூலம் வெளிப்பட்டது..
அதிதீவிர நம்பிக்கை: பொன்.ராதா உட்பட பாஜக தலைவர்கள் பலரது போட்டோக்கள் அந்த போஸ்டரில் இருந்தாலும், 'அண்ணாமலை அவர்களால் பாஜக பெருமை அடைகிறது' என்று கொட்டை எழுத்தில் அந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது, பாஜக சீனியர்களை திரும்பி பார்க்க வைத்தது.. அதுமட்டுமல்ல, தமிழிசை மாநில தலைவராக இருந்தபோதுகூட, பொன்.ராதா அனைத்தையும் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில், குமரி மாவட்ட விஷயத்தில் அவ்வளவாய் தலையிடவே மாட்டார்.. ஆனால், இப்போது அப்படியில்லை, அண்ணாமலையின் அந்த போஸ்டர் வாசகம் குமரியையே சுழற்றி சுழற்றி அடித்துவிட்டு போனதாக சொல்கிறார்கள்.
எதை பற்றியும் கவலைப்படாமல், யாரை பற்றியும் கவலைப்படாமல், தன் மீதான அசாத்திய நம்பிக்கையில், அண்ணாமலை களமாட துவங்கி உள்ளதை மேலிடமும் கவனிக்காமல் இல்லை.. "தனித்து போட்டி" என்று அண்ணாமலை சொல்லும் வியூகத்தையும் மேலிடம் கவனத்தில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.. அதுவும் இல்லாமல், கர்நாடக தேர்தல் விவகாரத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள், மேலிட தலைவர்களுக்கு மிகுந்த திருப்தியை தந்து வருகிறதாம்..

அண்ணாமலை சான்ஸ்: அந்தவகையில், பாஜக தலைவர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெற்றுவரும் நிலையில்தான், அண்ணாமலை கன்னியாகுமரியில் போட்டியிடலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வருட காலமாகவே, களப்பணியை தொடங்கிவிட்டார் மூத்த தலைவர் பொன்.ராதா.. தொகுதி மக்களை சந்திப்பதும், போனை போட்டு நிர்வாகிகளிடம் பேசுவதும் என படுஸ்பீடில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த முறையும், குமரி தொகுதி தனக்கே தனக்கு என்று ஸ்கெட்ச் போட்டு தேர்தல் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
ஆனால், 70 வயதை கடந்தவர்களுக்கு எம்பி சீட் கிடைப்பது பாஜகவில் எளிதாக சீட் கிடைக்குமா தெரியவில்லை.. காங்கிரஸ் எம்பி-யாக இருந்த வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலின்போது, பொன்.ராதாவுக்கு வாய்ப்பு தரப்பட்டபோதே அவருக்கு 71 ஆகியிருந்தது.. ஆனாலும் தனக்கு இந்த முறையும் சீட் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறாராம். இப்படிப்பட்ட சூழலில்தான், கன்னியாகுமரி தொகுதியில், தான் போட்டியிட்டால் முடிவு எப்படி இருக்கும் என்று ரகசிய சர்வே ஒன்றை எடுத்திருக்கிறாராம் அண்ணாமலை...
ரகசிய ரிப்போர்ட்: அந்த முடிவின்படி, குமரி கடலோர கிராமங்களில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதாக அந்த ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த சமூகத்தை சேர்ந்த சிலருக்கு சில வாக்குறுதிகளை தந்து, அண்ணாமலைக்காக வேலை செய்ய முடியுமா? என்பது போல, உத்தரவாதம் கேட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறதாம்.. அதாவது, இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டது, உள்ளூர் பாஜகவினருக்கே தெரியாது என்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications