ஆம்புலன்ஸ் எங்கே சார்? செந்தில்பாலாஜியை காரில் ஹாஸ்பிடல் அழைத்து வந்தது ஏன்? ஏதாவது ஆகியிருந்தால்?
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வராமல் காரில் அழைத்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுவும் காரின் பின் இருக்கையில் பக்கெட் சீட்கள் போடப்பட்டிருந்த நிலையில் அதில் படுக்க வைத்து நெஞ்சு வலி வந்தவரை அதுவும் ஒரு அமைச்சரை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. இது போன்ற சோதனைகள் நடத்தப்படும் போது ஆம்புலன்ஸ் வாகனத்தை முன் கூட்டியே நிறுத்தியிருக்க வேண்டும் அல்லவா.

ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தால் வரும் வழியிலேயே அவருக்கு பல்ஸ் பார்த்திருக்கலாம், ஈசிஜி பார்த்திருக்கலாம், தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கியிருக்கலாம். அமைச்சர் குடியிருக்கும் பகுதி ஒன்றும் புறநகர் பகுதி கூட இல்லை. ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.
அப்படியிருக்க அவரை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததன் பின்னணி மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை காற்றோட்டமாக கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லாமல் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்ததன் மர்மமும் புரியவில்லை.

மொத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என்ன சிகிச்சைகள் தரப்படுகிறது, என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அவரை பார்க்க மருத்துவமனை சென்ற அவரது வழக்கறிஞர்கள், சக அமைச்சர்கள் அளித்த பேட்டியின் அடிப்படையில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேசப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications