முடிஞ்சது டீல்?.. திணறும் பாஜக.. திருப்பியடிக்கும் அதிமுக.. குறுக்கே வந்த திருமாவளவன்.. அப்ப திமுக?
சென்னை: அதிமுகவின் முடிவை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.. அதேபோல, திருமாவளவன் குறித்து ஒரு முக்கிய கருத்தை அதிமுக உதிர்த்துள்ளது.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்??
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கொதிக்கும் அதிமுக: முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து, அதிமுக தலைமையை கொந்தளிக்க செய்தது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, மறுபடியும் அதிமுக தலைவர்களை சரமாரியாக விமர்சிக்கவும், கூட்டணிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார்: ஜெயக்குமாரின் இந்த கருத்தை முதலில் வரவேற்றது, விசிகவின் திருமாவளவன்தான்.. பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கதாகும். அதிமுக தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக இணைந்து பயணித்தால் அதன் வங்கி குறைந்துவிடும்'' என்று கூறியிருக்கிறார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவனை பொறுத்தவரை, பாஜகவை தொடர்ந்து சாடிவருபவர்... பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்தபடியும் இருக்கிறார் திருமா.
"ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்.. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது" என்று அதிமுகவுக்கு வார்னிங் தந்தபடியே இருந்தார் திருமா.
அலர்ட்: கர்நாடக தேர்தலின்போதுகூட, "கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என திருமாவளவன் அலர்ட் செய்திருந்தார்.
இன்று தமிழகத்தில் வாக்குகளை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக விசிக திகழ்கிறது.. அதற்கான முக்கியத்துவமும், அரசியல் களத்தில் பெருகி வருகிறது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருந்தாலும்கூட, அதிமுகவின் நன்மைக்காக பலமுறை அறிவுறுத்தல்களை சொல்லி வருகிறார்.. இதனால், அதிமுகவுடன் விசிக கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகம் பலமுறை எழுந்துள்ளது. அப்படித்தான் நேற்றைய தினம் அதிமுகவின் முடிவை வரவேற்று திருமாவளவன் பேசியிருந்ததும் பார்க்கப்பட்டு வருகிறது.
ஜெயக்குமார் பகீர்: ஒருமுறை ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டார்கள்.. "கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் சொல்லியுள்ளாரே என்று கேட்டதற்கு, "திமுக கூட்டணியில் நீடிக்க, திருமாவளவனுக்கு விருப்பமில்லை" என்று போகிறபோக்கில் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போயிருந்தார் ஜெயக்குமார்.
நேற்று ஜெயக்குமார் பேசும்போதுகூட, அரசியலில் மாற்றங்கள் இயல்பு, தேர்தல் வரும்போது கூட்டணியில் மாற்றம் வரும். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும் என்று கூறியிருக்கிறார்.
அன்று திருமாவளவன் குறித்து ஜெயக்குமார் பேசியதற்கும், நேற்று ஜெயக்குமார் பேசியதற்கும் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் குழம்பி உள்ளனர் தொண்டர்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை... பொறுதிருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications