அடுத்தடுத்து.. நடக்கும் விமான விபத்துகள்.. விமான இருக்கைகளில் பாதுகாப்பானது எது? எங்கே அமர வேண்டும்?
சென்னை: உலக அளவில் அடுத்தடுத்து விமான விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் 4க்கும் அதிகமாக விமான விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் 300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த விபத்துகளை தொடர்ந்து விமானத்தில் எந்த இருக்கையில் அமர்வது பாதுகாப்பானதாக இருக்கும்.. எங்கே இருந்தால் விபத்தில் மரணம் ஏற்படாது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் 1971 ஆம் ஆண்டு முதல் நடந்த 20 பெரிய விமான விபத்துகளை ஆய்வு செய்தபோது விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் உயிருடன் இருக்க 69% வாய்ப்பு இருப்பதாகவும், விமானத்தின் முன்புறத்தில் இருப்பவர்கள் மட்டுமே 49% வாய்ப்பு உள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளனர். விமானத்தின் இறக்கைக்கு அருகே வைக்கப்பட்ட பயணிகளுக்கு 59% வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. .

விமானத்தின் ஜன்னல், நடு அல்லது ஐயல் சீட்டில் எது பாதுகாப்பானது?
அதேபோல் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் விமான விபத்துக்களை ஆய்வு செய்தது. 1985 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் நடந்த விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் ஆகிய தரவுகளை ஆய்வு செய்தது.
விமானத்தின் பின்பகுதியில் நடு இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் 28% இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது குறைவான மரணம் இங்கே நிகழ்ந்து உள்ளது. அதுவே கேபினின் நடுவில் உள்ள ஐயல் சீட்டில் இருப்பவர்கள் 44% இறப்பு விகிதம் கொண்டு உள்ளனர். இது பாதுகாப்பு குறைவானது.
எனவே விமானத்தில் கடைசி வரிசையில் உள்ள நடு இருக்கைகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டு: 181 பேருடன் பயணித்த Jeju Air Flight 2216 கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் பலியானார்கள். 2 பேர் மட்டும் தப்பித்தனர்.
தாய்லாந்தில் இருந்து திரும்பிய Jeju Air Flight 2216 விமானம் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, விமானம் சுவற்றில் மோதிய உடன் தீப்பிடித்தது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் அவர்கள் மட்டும் தப்பித்தது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் கடைசி ரோவில் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேருமே ஜன்னல் பக்கம் இருந்துள்ளனர். அருகிலேயே எமர்ஜென்சி கதவும் இருந்துள்ளது. இதனால் அவர்கள் எளிதாக தப்பித்துள்ளனர். மற்றபடி விபத்தில் சிக்கிய எல்லோரும் உடல் நசுங்கி.. அதன்பின் தீயில் கருகி பலியாகி உள்ளனர். முன் பக்கம் முதல் கடைசி ரோவிற்கு முன்பு வரை விமானம் நசுங்கி வெடித்தது. இதனால் மற்ற எல்லோரும் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்திற்கு பின் தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கும். விமானத்தில் பிளாக் பாக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். தென்கொரியாவில் ஏற்கனவே அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு இடையே இந்த விபத்து அரசுக்கு எதிராக மாறி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications