Montha: செக்கச்சிவப்பாக.. மாந்தா புயலின் கண் எப்படி இருக்கு? வங்கக்கடல் சம்பவம்.. கவனிச்சீங்களா?
சென்னை: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் வாரத்தில் இந்த புயல் தமிழகக் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாந்தா புயல் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மாந்தா புயலின் கண் எந்த பாதையில் செல்லும் என்பது தொடர்பான கணிப்புகளைக் வெளியாகி உள்ளன.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் அக்டோபர் 27-ம் தேதி காலைக்குள் இந்தப் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 'மாந்தா' என்ற புயலாக வலுப்பெற்று, அடுத்த வாரத் தொடக்கத்தில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் எங்கே செல்லும்?
இந்த மாந்தா புயல் திங்கள்கிழமை காலை புயலாக வலிமை அடையும். மாந்தா புயலின் கண் எந்த பாதையில் செல்லும் என்பது தொடர்பான கணிப்புகளைக் வெளியாகி உள்ளன.
அதன்படி தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலிமை அடைந்து ஆந்திர பிரதேசம் மாநிலம் விஷாக்கப்பட்டினம் நோக்கி செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இதன் கண் விஷாக்கப்பட்டினம் அருகே கரையை கடக்கலாம் என்கிறார்கள். இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் வட தமிழ்நாடு மாவட்டங்களில் மழையை கொடுக்கும்.
அக்டோபர் 27 திங்கட்கிழமையன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகக் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 26-க்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின்னர் புயலாக மாறக்கூடும்.
'மாந்தா' என்ற இந்த புயலுக்கு தாய்லாந்து நாடே பெயரிட்டுள்ளது. தாய் மொழியில் இதற்கு "நறுமண மலர்" அல்லது "அழகான மலர்" என்று பொருள். இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயரிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
இந்திய வானிலை மையம் கணிப்பு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக இருக்கும் நிலையில், இந்த புயல் அச்சுறுத்தல் வந்துள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல உள் மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் இந்த அமைப்பால் பருவமழை மேலும் தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் வரும் நாட்களில் கணிசமான மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும். இந்த வானிலை நிகழ்வுகளின் ஒருமித்த போக்கு, மாநிலத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
புயல் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் தீவிரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பயணங்களைத் தவிர்ப்பதற்கும், கடுமையான வானிலைக்கு ஆளாவதைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வங்கக்கடலில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் கலைந்தது. ஆனால், தற்போது உருவாகியுள்ள அமைப்பானது 'மோன்டா' புயலாக வலுப்பெற தேவையான வளிமண்டல நிலைமைகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்புகளுக்கு பொதுமக்கள் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications