"குருமூர்த்தி".. ராஜதந்திரி கிட்ட ஓடிய ஓபிஎஸ்.. க்ளு கிடைச்சாச்சு.. ஓஹோ இதான் விஷயமா.. அப்ப எடப்பாடி
பண்ருட்டி ராமச்சந்திரனை கலந்தாலோசித்தே ஓபிஎஸ் முடிவுகளை எடுக்கிறாராம்
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, ஓபிஎஸ்ஸின் வேகம் குறைந்து காணப்பட்டு வந்தது.. எடப்பாடி + ஓபிஎஸ், இவர்கள் இருவரில் யாருக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை தீர்மானிக்கக்கூடியது வரப்போகிற தேர்தல் தான் என்றாலும், தற்சமயம், அதிமுக எடப்பாடி பக்கம் உள்ளதை மறுக்க முடியாது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆட்டமும் மெல்ல சூடுபிடித்து வருகிறது.
தமிழக அரசியலின் சாணக்கியனும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார்.. அத்துடன் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ்ஸின் வாக்கு வங்கிகளை உயர்த்த, பல்வேறு வியூகங்களையும் முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு, மூத்த அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, ஓபிஎஸ்ஸின் தற்போதைய வியூகங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

செங்குந்தர்
அவர் நம்மிடம் சொல்லும்போது, "தமிழ்தேசிய அரசியலை வைத்து, அதிமுகவின் தேவேந்திர குல வேளாளர் + செங்குந்தர் + யாதவர் + முத்தரையர் போன்ற கணிசமான வாக்குகளை அள்ள சீமான் காய் நகர்த்தி வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத பிற ஓட்டுக்களை ஓபிஎஸ் குறி வைத்து வருகிறார். கவுண்டர் சமுதாயத்தின் வாக்குகளை தவிர்த்து, கவுண்டர் சமுதாயம் அல்லாத பிற சமுதாய மக்களை ஈர்க்க முனைவது போலவும், இதற்கு மூளையாக செயல்பட்டு வருவது பண்ருட்டியார் போல் தெரிகிறது என்றும் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

வாயே திறக்கல
இப்படிப்பட்ட சூழலில்தான், 4 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தன் தரப்பிலான கூட்டத்தை கூட்டியிருந்தார்.. "அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்" என்று பண்ருட்டியார் அந்த கூட்டத்தில் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. காரணம், இதுவரை பெரிதாக வாய் திறந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை விமர்சிக்காமல் இருந்தார் பண்ருட்டியார்.. எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்டபோதும்கூட, எதுவும் அவரை விமர்சிக்கவில்லை.. ஆனால் தற்போது அதிமுகவில் உள்ள இடை செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

கரெக்ட் ரூட்
பண்ருட்டி ராமச்சந்திரனை பொறுத்தவரை ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்புவதாக தெரிகிறது.. அதாவது, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விட்டுத்தந்துவிட்டார்.. அப்படியானால் மிச்சமிருப்பது "ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவி மட்டுமே.. எனவே, கட்சி இப்போதுவரை தங்களிடம்தான் உள்ளது, அனைத்துமே முறைப்படிதான் நடக்கிறது" என்பதுதான் பண்ருட்டியாரின் பெருத்த நம்பிக்கையும், அதிமுக குறித்த பார்வையுமாக உள்ளதாக தெரிகிறது, இப்படி ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாக பண்ருட்டியார் இருந்துவரும் சூழலில், அது தொடர்பாக ஒரு தகவல் நமக்கு கூடுலாக கிடைத்துள்ளது..

குருமூர்த்தி
அதிமுகவின் அவைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்ததற்குப் பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தியிடம் விவாதிப்பதை குறைத்துக் கொண்டாராம் ஓபிஎஸ்.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் அரசியலுக்கு எதிராக என்ன மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம்? அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணலாம்? சட்டரீதியாக அணுகும் விஷயங்கள் என பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பண்ருட்டியாரிடம்தான் அதிகம் விவாதித்து வருகிறார் ஓபிஎஸ்... பண்ருட்டியின் ஆலோசனைகளைப் பொறுத்தே ஓபிஎஸ் கட்சி ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்கிறார்... டெல்லியில் ஏதேனும் மூவ் பண்ணனும் என்கிற விஷயத்தை தாண்டி, ஆடிட்டரிடம் வேறு எதை பற்றியும் விவாதிப்பதில்லையாம்.

பண்ருட்டியார்
சமீபத்தில் ஓபிஎஸ் நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, தன்னுடைய பேச்சு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பண்ருட்டியாரிடம்தான் நேரடி ஆலோசனையை பெற்றிருக்கிறார் ஓபிஎஸ்.. மேலும், சில சந்தேகங்களையும் பண்ருட்டியாரிடம் ஓபிஎஸ் கேட்டு தெளிவுபெற்றுக் கொள்கிறாராம்.. அப்படித்தான், ஒரு சந்தேகத்தை பண்ருட்டியாரிடம் கேட்டுள்ளார்.. எடப்பாடி பழனிச்சாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விஷயத்தில், எடப்பாடிக்கு சாதகமான அம்சங்கள் உண்டா? என்று பண்ருட்டியாரிடம் விவாதித்தாராம் ஓபிஎஸ்.

ஹேப்பி எடப்பாடி
இதற்கு காரணம், அந்த கணக்குகளை தேர்தல் ஆணையம் இணையதள பக்கத்தில் பதிவேற்றியிருந்தது, எடப்பாடி தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தாக்கல் செய்த அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பதிவேற்றியதால், எடப்பாடி பழனிசாமி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவே அது பார்க்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், வரவு செலவு அறிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியது, எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகமும் அடைந்தனர்.

ஓபன் டவுன்
இது ஓபிஎஸ் தரப்பை சற்று அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைய செய்தது.. அதனால்தான், வெப்சைட்டில் கணக்குகளை பதிவேற்றம் செய்ததால் என்ன எடப்பாடி தரப்புக்கு என்ன நன்மை? என்று வெளிப்படையாகவே பண்ருட்டியாரிடம் கேட்டாராம் ஓபிஎஸ்.. அதற்கு பண்ருட்டியார், "பொதுக்குழு முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்கக்கூடாது என்று உங்கள் (ஓபிஎஸ்) தரப்பில் ஆட்சேபனை செய்யப்பட்டதால், அந்த விவகாரம் கிடப்பில் வைத்து விட்டது தேர்தல் ஆணையம்...

ராஜதந்திரி
ஆனால், வரவு செலவு தாக்கல் அப்படி கிடையாது.. அவர்கள் தாக்கல் செய்ததை உங்கள் தரப்பில் ஆட்சேபனை செய்யாததால் அதனை இணையத்தளத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.. இதைத் தாண்டி எந்த முக்கியத்துவமும் அதற்கு இருக்கப்போவதில்லை... ஆனால், நீங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டும் அதே நாளில் அதனை இணையத்தளத்தில் ஆணையம் வெளியிட்டிருப்பதில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் இருக்கிறது" என்று சொல்லி அந்த க்ளூவை தெளிவுபடுத்தி, ஓபிஎஸ்ஸை கூல் செய்தாராம் அரசியல் ராஜதந்திரி பண்ருட்டி ராமச்சந்திரன்..!!!












Click it and Unblock the Notifications