நீண்ட கண்ணாடி பாலம்.. கடலில் மிதக்கும் கார்டன்.. மெரினாவில் எங்கே அமைகிறது "கருணாநிதியின் பேனா"?
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. இங்கு தற்போது அவரின் பேனாவை சிலையாக வைக்க உள்ளனர்.
முன்னர் கருணாநிதியின் சமாதிக்கு முன்பாக பேனா சிலை வைக்கும் திட்டம் இருந்தது. தற்போது சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலும், வித்தியாசமாக நினைவிடம் அமைக்கும் வகையிலும்.. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னத்தை நிறுவ முடிவு செய்துள்ளனர்.
கருணாநிதியின் சமாதியில் இருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது.

ஏன்?
திருவள்ளூவர் சிலை 133 அடி உயரம் தொடந்து. இதைவிட 1 அடி உயர்தத்தில் பேனா சிலையை வைக்க உள்ளனர். இந்த பேனா சிலை 134 அடி உயரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடலில் திருவள்ளுவர் சிலை இருப்பது போல தளம் அமைக்கப்பட்டு அதில் பேனா இருக்கும். கருப்பு நிறத்தில் இந்த பேனா வைக்கப்பட உள்ளது. அதை சுற்றி தளம் அமைக்கப்பட்டு அதில் கார்டன் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் பேனாவை தொட முடியாது.

காரணம்
கருணாநிதியின் வசனங்கள், கதைகள், கவிதைகள், அவரின் எழுத்துக்களை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இதை சுற்றி கடலிலேயே பெரிய கார்டன் இருப்பது போன்ற வசதியை ஏற்படுத்த போகிறார்கள். அதாவது நடுவில் மட்டும் பேனா இருக்கும். அதை சுற்றி தொங்கும் தோட்ட அமைப்பு இருக்கும். இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.

பேனா சிலை
இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கடலில் கட்டுமானங்களை மேற்கொள்ள சிஆர்இசட் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு இந்த அனுமதியை கொடுக்க வேண்டும். ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு அரபிக்கடலில் இதேபோல் சத்திரபதி சிவாஜி சிலையை கடலின் நடுவில் வைக்க கட்டுமானத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை
இதற்கு அனுமதி கேட்டு சில நாட்களில் CRZ மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் CRZ அனுமதி கோரும் நடைமுறைகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறையும் தொடங்கியுள்ளது. அதோடு சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு இனி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்களையும் மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த அனுமதி கிடைத்த பின் கட்டுமானம் தொடங்கும்.

எங்கே வருகிறது
மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்திற்கு அருகில் பேனா நினைவுச்சின்னம் அமையவுள்ளது. இங்கே அதிக மணல் உள்ளதாலும், தரை வலுவாக இருப்பதாலும், எளிதாக கட்டுமானம் மேற்கொள்ள முடியும். கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்தில் இது கட்டப்பட உள்ளது.
Recommended Video

கண்ணாடி பாலம்
இதற்காக அங்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படும். அதாவது சமாதியில் இருந்து கடலில் சிலை வரை. கண்ணாடி பாலம் வழியாக நடந்து செல்ல முடியும். கடலில் இருந்து 6 மீட்டர் உயர்த்தில் இந்த பாலம் அமைக்கப்படும். 7 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த பாலம் இருக்கும். எளிதாக மக்கள் சிலையை ரசிக்கும்படி இந்த கட்டுமானம் செய்யப்பட உள்ளது. மொத்தமாக இதற்கு 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications