பாஜக அரசு பத்தி இனி தப்பா பேசக்கூடாது.. எங்க சமூக நீதியை ஸ்டாலின் பின்பற்றுவாரா? நாராயணன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அரசு குறித்த உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்வதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றும், பாஜகவின் உண்மையான சமூக நீதியை பின்பற்றுவாரா அவர் பின்பற்றுவாரா எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

Whether CM MK Stalin follow social justice of BJP - Narayanan Thirupathi

ஆனால் பாஜக அரசு அமைந்த 2014 ம் ஆண்டுக்கு பின்னர் தான் மத்திய அரசின் துறைகளில் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 % பட்டியலினத்தை சேர்ந்தோருக்கும், 8 % பழங்குடியினத்தோருக்கும், 30 % இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவு மாணவ, மாணவிகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-21 ல், 28 % பட்டியலின மாணவர்களும், 47% பழங்குடியின மாணவர்களும், 31.7% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களும் மத்திய அரசின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இணையும் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது பாஜக அரசில் இட இதுக்கீட்டை சிறந்த அளவில் செயல்படுத்தி உள்ளது என்பதை தெளிவாக்குகிறது.

ஆனால், திமுக அங்கம் வகித்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்த போது 12 % க்கும் குறைவான இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமே மத்திய அரசு பணிகளில் இருந்தனர் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா? 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முழுமையாக பணி நியமனம் செய்யாதது ஏன் என்பதற்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விளக்கம் தர வேண்டும்?

இனிமேலும் பாஜக அரசு குறித்த உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியை பின்பற்றுவாரா முதல்வர்?" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+