“லிஸ்ட்டில் உங்க ஏரியா?” மூடப்பட இருக்கும் 500 டாஸ்மாக் கடைகள் எவை எவை? வேலையை ஆரம்பித்த அதிகாரிகள்!
சென்னை : சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட '500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக, மூடவேண்டிய தகுதிவாய்ந்த 500 கடைகளை அடையாளம் காணுவதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது 9 புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அப்போது, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார்.

500 டாஸ்மாக் கடைகள் : இதையடுத்து, மூடப்பட இருக்கும் தகுதிவாய்ந்த டாஸ்மாக் கடைகள் எவ்வாறு அடையாளம் காணப்படும் எனக் கேள்விகள் எழுந்தன. வியாபாரம் குறைவாக இருக்கும் கடைகள், எதிர்க்கட்சியினர் நடத்தும் கடைகள் மட்டுமே மூடப்படக்கூடும் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை.
50 மீட்டருக்குள் இருந்தால் : 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளிகள், கோயில்களுக்கு அருகே உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வுகளின் முடிவில் 500 கடைகள் இறுதி செய்யப்பட்டு அவை மூடப்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மது விருந்து நடத்த அனுமதியளிக்கும் வகையில் அரசாணை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது கவனம் பெற்று வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications