"பொறுமையை சோதிக்கும்.." இன்று காத்திருக்கும் சம்பவம்! எங்கெல்லாம் மழை பெய்யும்! வெதர்மேன் ட்வீட்
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளனர்.
மாநிலத்தில் இருக்கும் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகளும் சந்தோஷமாக உள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மெல்ல நகர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

பிரதீப் ஜான்
இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளை பதிவிட்டு உள்ளார். இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது? இன்று மாலை எங்கே இருக்கும்? எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்யும் மழையில் ஒரு பகுதி மட்டுமே நிலத்தில் விழும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பொறுமையைச் சோதிக்கும்
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்றிரவு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டு என்றால், 'இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்' உங்கள் பொறுமையைச் சோதிக்கும்.. இது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் கூட வெகு தொலைவில் தான் உள்ளது. அது இன்று இரவு சென்னை உட்பட கடற்கரை மாவட்டங்களுக்கு அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பகுதி மட்டுமே
கனமழை மற்றும் தீவிர மழையின் பெரும்பகுதி கடலில் விழும் நிலையில், அதன் ஒரு பகுதி மட்டுமே கடற்கரை மாவட்டங்களில் விழும் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுமையாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக வடதமிழக வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக நேற்றிரவு அவர் தனது ட்விட்டரில், "கரு மேகங்கள் இப்போது சென்னைக்கு வடகிழக்கே உள்ளது..

எங்கு மழை பெய்யும்
நவ. 21இல் அது சென்னைக்குக் கிழக்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அது நமக்கு மிக அருகில் இருக்கும். இந்த மேகங்களின் ஒரு பகுதி நகரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழையைத் தரும். இன்றும் (நவம்பர் 21) நாளையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கனமழையைப் பெறும். மற்ற மாவட்டங்களுக்கு 21-22ல் அதிக மழை இல்லாமல் போகலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் கூட இன்றைய தினம் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி இருந்தது.

மழை
அதேபோல நாளை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications