தமிழக லோக்சபா தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்த கட்சி எது? ஸ்டன்னிங் டேட்டா!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 2ஆவது இடத்தை அதிமுக 29 இடங்களில் பெற்றுள்ளது. அது போல் 10 இடங்களில் பாஜக 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகள் எண்ணிக் கொண்டிருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. கடந்த முறையாவது தேனி தொகுதி நீங்கலாக மற்ற 38 இடங்களை பெற்றது. ஆனால் இந்த முறை 39 தொகுதிகளிலும் இவ்வளவு ஏன் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 29 தொகுதிகளில் அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. அது போல் 10 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் வெல்ல முடியவில்லை என எம்பி சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , பாஜக , நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 25.78 சதவீத வாக்கு சதவீதத்தையும் அதிமுக 20.43 சதவீதத்தையும் காங்கிரஸ் 10.81 சதவீதத்தையும் பாஜக 10.69 சதவீதத்தையும் பெற்றுள்ளது.
தென் சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, நீலகிரி தொகுதிகளில் அதிமுக 3ஆம் இடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரியில் அதிமுக 4ஆம் இடத்திலும் 20 தொகுதிகளில் அதிமுக 2ஆம் இடத்திலும் உள்ளது. அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி 2-ஆம் இடத்தை ஓபிஎஸ் பெற்றுள்ளார்.
பாஜக, அதிமுகவின் இந்த படுதோல்வி குறித்து மாரிதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உன்னால நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட.. இது தமிழக அதிமுக பாஜக நிலை!
TN பாஜக அதிமுக கூட்டணி உடைய கூடாது! கூடுதல் பொறுப்போடு அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட என் போன்றவர்களை அந்த நேரத்தில், வார் ரூம் வைத்துத் திட்டி தீர்த்த அனைவருக்கும் சொல்ல விரும்புவது "ஒரு உண்மை - அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் மனதுக்கு கசப்பாக இருந்தாலும் அது உண்மை என்பதால் அதை ஏற்று - அதில் உரியத் திருத்தம் செய்து வெற்றியைச் சிந்தித்திருக்க வேண்டிய அரசியல் அவசியமாகிறது". ஒருவேலை தெலுங்கானா அல்லது ஒடிசா கை கொடுக்கவில்லை. இன்று ஆட்சி அமைப்பதே சிரமாக அமைந்திருக்கும்.
39+1 - 40 தொகுதி கொண்ட முக்கியமான மாநிலமான தமிழகத்தில் 0ல் இருந்து என்பது எந்த அரசியல்வாதியும் ஏற்க கூடிய விசயமல்ல. ஒன்று கட்டமைப்பு உருவாக்க வேண்டும் இல்லை கட்டமைப்பு உள்ள கட்சியோடு கூட்டணியை வழுவாக எடுத்து செல்வது அவசியம். இனி வரும் காலங்களில் உண்மைகளுக்கு காது கொடுங்கள். வெறும் கோசத்திற்கு அல்ல! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications