எம்ஜிஆரை பிடிக்கும்.. ஸ்டாலின்தான் இனிமேல் எல்லாம்.. மக்கள் மனம் கவர்ந்த தலைவர் யார்? சூப்பர் சர்வே
சென்னை: தமிழகத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் கோலோச்சியுள்ளனர். இதில் மக்களுக்கு ரொம்பவே பிடித்த தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள 'ஒன்இந்தியா தமிழ்' சார்பில் பல தரப்பட்ட மக்களிடமும் கருத்து கேட்டோம்.
Recommended Video
அவர்கள் கூறிய விடைகள் ஆச்சரியமாக இருந்தன. பெரும்பாலானோர் எம்ஜிஆரைத்தான் பிடிக்கும் என்றனர். குறிப்பாக பெண்கள். இதோ மக்களின் கருத்துக்கள்:

நூரி- சமூகசேவகி: எனக்கு பிடிச்ச தலைவர் புரட்சி தலைவர் எம்ஜியார்தான். அவர் கொள்கை, தான தர்மம், பிடிக்கும். அவர் மறைந்தாலும், புகழ் மறையவில்லை. சாப்பிடாமல் யாரையும் விட மாட்டார். நானும் அதையே பின்பற்றுகிறேன். மனைவி முகத்தை பார்ப்பார். தாய் வயிற்றைத்தான் பார்ப்பார். "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" என்ற எம்ஜிஆர், கொள்கை எனக்கு பிடிக்கும்.
பக்ருதின் அலி அகமது: 8 வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். முதலில் காமராஜர் பிடிக்கும். இப்போது ஸ்டாலினை பிடிக்கும். இப்போது வலிமையான தலைவர்கள் இல்லை என்றாலும், ஸ்டாலினை விட்டால் தமிழகத்திற்கு கதி கிடையாது.
5ம் வகுப்பு மாணவர் யஷ்வந்த்: காமராஜரை ரொம்ப பிடிக்கும்.
ஜெகதீஷ்வரி- ஆசிரியர்: இந்திரா காந்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும். பெண்ணாக இருந்து, வெளிப்படையாக ஆட்சி செய்தவர் என்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகள் காப்பாளர் பணி செய்யும் பூங்கோதை: கிராமத்திலிருந்து சென்னை வந்து, சினிமாவில் எழுத்தாளராக இடத்தை பிடித்து, 5 முறை தமிழகம் ஆண்ட முதல்வர். 1976ல் பூங்கோதை என்று, எனக்கு பெயர் சூட்டியவர், கருணாநிதி. அவர்தான் எனக்கு பிடிக்கும். மலைக்கள்ளன் பட கதாநாயகி பானுமதி கதாப்பாத்திர பெயர் பூங்கோதை. ஆலடி அருணா, மகள் டாக்டர். பூங்கோதை. அவர் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். எனவே எனக்கு இந்த பெயரால் மகிழ்ச்சி.
இஸ்திரி தொழில் செய்யும் நடுத்தர வயது ஆண்: எனக்கு கமல்ஹாசன் பிடிக்கும். சிறு வயது முதலே, அவரை பிடிக்கும். ரசிகர் என்றும் எடுக்கலாம். வேறு எப்படியும் எடுக்கலாம். அரசியல் தலைவர் என்பதைவிட நடிகராக அவரை ரொம்ப பிடிக்கும்.
தேனீர் விற்பனை செய்யும் பெண்: எனக்கு எம்ஜிஆர் பிடிக்கும். ஏழைகளுக்கு நல்லது செய்பவர். ஏழைகளுக்கு கொடுத்து உதவுவார். சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார். பசியோடு யாரும் இருப்பதை விரும்பாதவர் எம்ஜியார்.
லிசி- பூக்கடை வைத்திருப்பவர்: எனக்கு பிடித்த தலைவர் கேரள முதல்வர், பினராயி விஜயன். நாட்டுக்கு நல்லது செய்பவர். எனவே பிடிக்கும்.
தாரிக்- 9ம் வகுப்பு மாணவர்: எனக்கு பிடித்த தலைவர் டாக்டர்.அம்பேத்கர். அம்பேத்கர் போராட சொல்லி கொடுத்தார். நாட்டின் அரசியல் சாசனம் இயற்றியவர். சட்ட மேதை. இவ்வாறு பல தரப்பட்ட மக்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications