மொத்தமாக மாறும் "சென்னை மெட்ரோ.." இந்த 5 ஸ்டேஷன்களில் வரும் வேற லெவல் வசதி.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதில் புதிய அட்டகாசமான வசதி வர இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை இப்போது விம்கோ நகர்- சென்னை ஏர்போர்ட், சென்டிரல்- பரங்கிமலை இடையே இரண்டு ரூட்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதனால் மெட்ரோவில் புது புது வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுப்பது போன்ற வசதிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
மெட்ரோ: இதற்கிடையே சென்னை மெட்ரோவில் அட்டகாசமான ஒரு வசதி வர இருக்கிறது. அதாவது மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் எளிதாகச் செல்ல உதவும் வகையில் புதிய சேவையைச் சென்னை மெட்ரோ அறிமுகப்படுத்த உள்ளது. Last mile connectivity என்ற இந்த சேவை, மிக விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தச் சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது.
திருமங்கலம், கிண்டி, சென்னை விமான நிலையம், கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முதற்கட்டமாக இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்லாலாம்.
ஐந்து ரயில் நிலையங்கள்: இது குறித்து சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து நான்கு இருக்கைகள், ஐந்து இருக்கைகள், எட்டு இருக்கைகள் மற்றும் 12 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளோம். சில வாரங்களில் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த சேவையை வழங்க யார் ஆர்வமாக உள்ளனர் என்பது குறித்து தகவல்களை சேகரிக்க உள்ளோம். அவர்கள் தரும் கருத்துகள் அடிப்படையில் டெண்டர் நிபந்தனைகள் அமைக்கப்படும்" என்றார்.
தற்போது சென்னையில் 54 கிமீ நீளத்திற்குச் சென்னை மெட்ரோ இயங்கி வரும் நிலையில், அதில் இந்த ஐந்து ரயில்வே ஸ்டேஷன்கள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகரில் அதிக மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ஸ்டேஷன் என்ற அடிப்படையில் இவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரயில்வே நிலையங்களில் இருந்தும் இதுபோன்ற சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று மெட்ரோ பயணிகள் பல காலமாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இ்பபோது 5 ரயில் நிலையங்கள் மட்டும் இதற்காகத் தேர்வு செய்துள்ளனர்.
கோரிக்கை: ஏற்கனவே சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி பேருந்துகள் இ ஆட்டோக்கள் இருக்கும் போதிலும் அந்த சேவை எப்போதும் இருப்பதில்லை என்ற புகார்கள் இருக்கிறது.. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட தூரத்திற்கு எளிமையாகப் பயணிக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
ட்விஸ்ட்: மக்கள் கோரிக்கை இந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாதாமாதம் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அப்படியிருக்கும் போது, அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த சேவையைக் கொண்டு வராமல் எதற்காக இந்த 5 ஸ்டேஷன்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதற்குத் தெளிவான காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications