காளியம்மாள் இணையப் போவது எந்த TVK? வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சியா? விஜய்யின் வெற்றிக் கழகமா?
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காளியம்மாள், பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணையக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
நாம் தமிழர் கட்சியின் பெண்களின் முகமாக இருந்தவர் காளியம்மாள். அக்கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார் காளியம்மாள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து அக்கட்சியை விட்டு வெளியேறுவதாக காளியம்மாள் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காளியம்மாள் எந்த கட்சியில் சேரக் கூடும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் பெரும்பாலான மாநில நிர்வாகிகள்- தமிழ்த் தேசியக் கோட்பாட்டையும் பிரபாகரனையும் ஏற்றுக் கொண்டவர்கள் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கொத்து கொத்தாக இணைந்து வருகின்றனர். இந்த இணைப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்திலும் வேல்முருகன் தொடர்ந்து பங்கேற்றும் வருகிறார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய பாதை, விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு, கூட்டணிக்காக திமுகவுடன் இருந்தாலும் விமர்சனத்துடன் அணுகுவது ஆகியவற்றால் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வை முழுமையாக நம்புகின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டசபை- லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் வேல்முருகன் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதே வரிசையில், தமிழ்த் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் என அறிவித்துவிட்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என்று கூறும் நடிகர் விஜய் பக்கம் காளியம்மாள் தாவக் கூடும் எனவும் கூறப்படுகிறது. திமுகவை நாம் தமிழர் கட்சி மேடைகளில் கடுமையாக விமர்சித்தவர் காளியம்மாள். இதனால் திமுகவை தொடர்ந்து எதிர்த்து பேச வேண்டியவராகவும் இருக்கிறார். இதற்கான இடமாக இருப்பது தமிழக வெற்றிக் கழகம்தான். ஏனெனில் பண்ருட்டி வேல்முருகன், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர்; அங்கு வெளிப்படையாக திமுகவை விமர்சிக்கவும் முடியாது. இதனால்தான் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணையக் கூடும்; வரும் சட்டசபை தேர்தலில் கடலோர மாவட்ட சட்டசபை தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்











Click it and Unblock the Notifications