கருணாநிதி பற்ற வைத்த நெருப்பு.. 1996ல் ஆதிதிராவிட கிறிஸ்தவருக்கு இடஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் செம
சென்னை: ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் இயற்றியிருக்கிறார். ஆனால் இதற்கான விதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்டதுதான். அவர் வலியுறுத்திய விஷயத்தை தற்போது மகன் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானமாக கொண்டு வந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் சாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகள் நாடு சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு ஆன பின்னரும் ஒழிந்தபாடில்லை. இப்படியாக தீண்டாமை கொடுமைகளை அதிக அளவில் எதிர்கொள்ளும் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது முன்னேற்றத்திற்கான பாதையை அமைத்து கொடுத்தது. ஆனால் இதிலும் சில சிக்கல்கள் எழுந்தன. அதாவது தீண்டாமை கொடுமைகளை அதிகம் எதிர்கொள்ளும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது என்பதுதான் இந்த சிக்கல்.

இந்த சிக்கல் சீக்கிய மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் மாறிய தலித் மக்களுக்கும் இருந்தது. ஆனால் இது முறையே 1956 மற்றும் 1990ம் ஆண்டுகளில் உடைக்கப்பட்டது. அதாவது இந்த இரு மதங்களை ஏற்றுக்கொண்ட தலித் மக்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது வரை கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சுமார் 19 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த குறிப்பிட்ட இரண்டு மதங்களை சேர்ந்த ஆதி திராவிடர் மக்களை பட்டியலினத்தில் சேர்ப்பத்தற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.
அதாவது இந்த இரண்டு மதங்களிலும் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று மத்திய அரசு நம்புகிறது. அதானல்தான் இவர்களை பட்டியலினத்தில் சேர்க்க மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால் உண்மையான கள யதார்த்தம் வேறாக இருக்கிறது. அதாவது கிறிஸ்தவத்தில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என நீண்ட நாட்களாக கூறி வந்த நிலையில் சமீபத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையே இந்த பாகுபாடு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
அதேபோல இந்த இரு மதங்களில் உள்ள ஆதி திராவிட மக்கள் மற்ற சமூகத்தினரைவிட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவுப்படுத்தியுள்ளன. எனவே இவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகதான் தற்போது திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவத்தை தழுவிய ஆதி திராவிடர் மக்களும் பட்டியல் இனத்தவர்கள்தான் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஆனால் இதற்கு முன்னரே முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இது தொடர்பாக மத்திய அரசுக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருக்கிறார். 1996ம் ஆண்டு தொடங்கி, 2006 மற்றும் 2010ம் ஆண்டு இந்த கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் அவர் சில விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, "1950ம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்டோர் சட்டம், 1956ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சீரமைப்பு சட்டம், 1976ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி., சட்ட திருத்தம் ஆகியவை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்து என்றாலும் சரி, சீக்கியன் என்றாலும் சரி, புத்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரை தாழ்த்தப்பட்டவர் என்று கருத வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த சட்டங்களை கொண்டு சீக்கியர்கள், புத்த மதத்தை சேர்ந்த தலித்துகள் பட்டியலினத்தை சேர்ந்தவராக அங்கீகரிக்கப்பட்டனர். அதேபோல தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்களோ, அத்தனை சலுகைகளையும் அவர்கள் வேறு மதத்துக்கு மாறினாலும் கொடுப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியது. எனவே தலித் கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்ற சட்டப்பிரிவுகள் 341 (2) மற்றும் 342(2) ஆகியவற்றின் கீழ் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உதவ வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய எல்லா சலுகைகளையும் குறிப்பாக இட ஒதுக்கீடு பெற அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க உறுதி செய்ய வேண்டும்" என்று கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். தந்தை கடிதமாக பற்ற வைத்த நெருப்பொன்றை மகன் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் வரை கொண்டு வந்து கொழுந்துவிட்டு எரிய செய்திருக்கிறார் என்று கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications