"முடியாவிட்டால் விலகிவிடுங்கள்.." விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. வசமாக சிக்கிய அந்த 7 மா.செக்கள் யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவரான ஸ்டாலின் 7 மாவட்டச் செயலாளர்களைப் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே இன்றைய தினம் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 Who are the 7 dmk district secretaries whom DMK chief Stalin was angry

பொதுவாக திமுக சார்பில் நடத்தப்படும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு வந்து குறைந்தது ஒரு வாரம் கழித்தே நடக்கும். ஆனால், இந்த முறை வெள்ளிக்கிழமை அறிவிப்பு வந்த நிலையில், இன்றைய தினமே காணொலி வாயிலாகக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்: இந்த கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அடுத்து நடைபெறும் 2024 லோக்சபா தேர்தல் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதியில் 39 தொகுதிகளில் மெகா வெற்றியைப் பெற்றது. இந்த முறையும் அதேபோல வெல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.

பொதுவாகக் காணொலி மூலம் நடத்தப்படும் மா.செ. கூட்டங்களில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரைகளைக் கூறுவார். இந்தக் கூட்டம் அதுபோல இருக்கும் என எதிர்பார்த்த மா.செக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் படும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். குறிப்பாகக் கூட்டணி உட்பட எந்த தொகுதியில் வேட்பாளர் தோற்றாலும், அந்த மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்ததாகத் தகவல் வெளியானது.

7 பேருக்குச் சிக்கல்: இதற்கிடையே இந்த மா.செ கூட்டத்தில் முதல்வர் பேசியது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் 7 பேர் மீது கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டே, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார், அந்த 7 மாவட்டச் செயலாளர்களில் 3 பேர் அமைச்சர்களாவர்.

மேலும், தேர்தல் பணிகளில் தொய்வு இருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். இந்த கூட்டத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பெயர்களை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் செயல்பாடுகளில் சிறப்பாக இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதிருப்தி: வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்தில் சுணக்கம் இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து புகார் அளிப்பதாகவும் ஸ்டாலின் அவர்களிடம் அதிருப்தி தெரிவித்தார். மேலும், திமுகவில் ஒரு மாவட்டச் செயலாளர் கீழ் 6 சட்டசபை தொகுதிகள் வரும்... மேலும், இந்த 6 தொகுதிகளுக்கும் தனியாகப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து இந்த மாவட்டச் செயலாளர்கள் செயல்படுவதில்லை என்றும் இது குறித்து பொறுப்பாளர்கள் தொடர்ந்து புகார் அளிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் டென்ஷன் ஆகியுள்ளார்.

மேலும், ஒரு அமைச்சரைப் பார்த்து உங்கள் பணிகளைச் செய்யுங்கள் இல்லையென்றால் விலக்கிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாகத் தெரிகிறது. அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ரெடியாக உள்ளனர்.. இருப்பினும், அதை வாக்காக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்றும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

யார் அந்த 7 பேர்: சென்னையில் அமைச்சராக உள்ள மாவட்டச் செயலாளர் ஒருவர், ராயபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுதியின் மாவட்டச் செயலாளர், அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்டச் செயலாளர் ஒருவர் என மொத்தம் 7 பேர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளார். முதல்வர் நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டு எச்சரித்த மாவட்டச் செயலாளர்களில் 5 பேர் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர், மேலும் 2 பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் ஆகும்.

அதிருப்தியில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை விரைவில் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சட்டசபைத் தேர்தல் பொறுப்பாளர்கள் வாரம் ஒரு முறை தொகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுக்கு பணிகளை ஆரம்பிக்க எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இப்படி மாசெ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆக்ஷன் மோடிற்கு மாறியது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+