Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 தலைகள்.. இறங்குனா சம்பவம் உறுதி! அடுத்த ஆடியோவில் ஸ்டாலினுடன் உரையாற்றும் முதல்வர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 'Speaking 4 India' பாட்காஸ்ட்டின் அடுத்த எபிசோடில் 3 மாநில முதலமைச்சர்கள் பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதலமைச்சர்கள் யார் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், இதுகுறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் வகையிலும், இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் 'Speaking 4 India' என்ற தலைப்பில் ஆடியோ பாட்காஸ்ட் சீரிஸ் வெளியிட்டு வருகிறார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் பேசிய முதல் பாட்காஸ்ட் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது. அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காயப் பார்க்கிறது என விமர்சித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

 Who are the chief ministers who will speak with TN CM Stalin in the next Speaking4India podcast?

செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோடில், சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பாஜகவின் ஏழு மெகா ஊழல்களைப் பற்றிப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அக்டோபர் 31ஆம் தேதி வெளியான மூன்றாவது எபிசோடில், மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்தும், தேர்தல் நடைபெற்ற 5 மாநில வாக்காளப் பெருமக்களுக்குக் கோரிக்கை விடுத்தும் பேசி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அடுத்த பாட்காஸ்ட் அதிரடி: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் 'இந்தியாவுக்கான குரல்' பாட்காஸ்ட் சீரிஸின் நான்காவது எபிசோட் விரைவில் வெளியாக உள்ளது. இதில் எந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி ஸ்டாலின் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சஸ்பென்ஸை உடைத்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த எபிசோடில் தான் பேசப்போகும் விஷயம் பற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

 Who are the chief ministers who will speak with TN CM Stalin in the next Speaking4India podcast?

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு குட்டு வைத்துள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் நிலையில், அது ஆளுநருக்கு பெரிய நெருக்கடியாக அமையலாம் என்ற பேச்சுகள் உள்ள சூழலில், தனது அடுத்த பாட்காஸ்ட் எபிஸோடில், மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு பற்றி பேசுவதாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

3 மாநில முதலமைச்சர்கள்: இந்நிலையில், திமுக ஐடி விங், அண்மையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் பேசும் 'Speaking 4 India' பாட்காஸ்ட் தொடரின் அடுத்த பகுதியில் 3 மாநில முதலமைச்சர்கள் உரையாற்றுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அரசியல் சட்டத்தின் மாண்புகளை சிதைக்கும் ஆளுநரின் அத்துமீறல்கள் என்ற தலைப்பில் இந்த பாட்காஸ்ட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Who are the chief ministers who will speak with TN CM Stalin in the next Speaking4India podcast?

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர்கள் - அரசுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் - அந்தந்த மாநில முதலமைச்சர்கள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது, அதிகார தலையீடு உள்ளிட்ட விஷயங்களால் மோதல்கள் நிலவுகின்றன.

யார் யார்?: இந்நிலையில் தான், ஆளுநரின் அத்துமீறல்கள் பற்றிய பாட்காஸ்ட்டில் 3 மாநில முதலமைச்சர்கள் உரையாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதலமைச்சர்கள் யார் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுபற்றி திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், அடுத்த பாட்காஸ்ட்டில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பேசப்போவது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எனக் கூறப்படுகிறது.

 Who are the chief ministers who will speak with TN CM Stalin in the next Speaking4India podcast?

கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், கேரள அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் மோதல் போக்கு தீவிரமாக உள்ளது. அதேபோல, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் அம்மாநில ஆம் ஆத்மி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட், ஆளுநரின் அதிகார எல்லையைச் சுட்டிக்காட்டி குட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் - முதல்வர் மம்தா பானர்ஜி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இணக்கமில்லாத சூழல் உருவானது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

அதேபோல, டெல்லியிலும் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே நீண்டகாலமாக நிர்வாக ரீதியில் மோதல்கள், முரண்பாடுகள் இருந்து வருகின்றன. கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்றது முதலே ஆளுநர் vs கெஜ்ரிவால் மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தான், ஆளுநர்களை காட்டமாக எதிர்கொண்டு வரும் 3 மாநில முதல்வர்களான மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோர், ஆளுநர்களின் அத்துமீறல்கள் பற்றி, 'Speaking 4 India' ஆடியோ சீரிஸில் பேச உள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படுவதாக ஆளுநர்களை விமர்சித்து பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் இந்தக் குரல், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+