46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனித்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி குறித்து இந்து முன்னணி எழுப்பியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதம் மாறியவர்கள் இந்து பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தேர்தல் ஆணையத்திற்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். சட்ட விதிகளை மீறி போலியான சான்றிதழ்கள் மூலம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித்தொகுதிகள் உள்ளன.

இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.
தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications