யார் அந்த சீனியர்கள்? திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.. பிடிஆருக்காக எழுந்த குரல்கள்
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் அப்பொறுப்பில் தூக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் சீனியர்கள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடு தான் காரணமா என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் சமூக வலைளதங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் பாஜகவின் அரசியலுக்கு கடும் சவாலை தந்தவர் என்றால் அது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். புள்ளி விவரங்களால் பாஜக மற்றும் அதிமுகவிற்கு பதிலடி கொடுத்ததற்காக முதல்வர் ஸ்டாலினால் பலமுறை பாராட்டப்பட்டவர்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடுமையான சவலாக இருந்தவர் என்றால் அது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.ஜிஎஸ்டி வரி வசூல் மற்றும் நிதி விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடும் சவால் தந்தவர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி மீதே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் அரங்கினை அதிரவைத்தனர். அதிமுகவின் நிதி நிர்வாகத்தை புள்ளி விவரத்தோடு பாய்ண்ட் பாய்ண்டாக விவரித்து நிதி நிர்வாகத்தில் அதிமுக செய்தது தவறு என்று அந்த கட்சியை அலற வைத்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
இதை எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்ட திமுக நிர்வாகிகள் அவரை கொண்டாடினார்கள். தொண்டர்களும் பிடிஆர் செயல்பாடுகளை பாராட்டினார்கள். எல்லாம் ஏறுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித் துறை ஏன் பறிக்கப்பட்டது? என்ற கேள்வியும், விவாதமும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் எழுந்துள்ளது.
ஒரு அமைச்சர் துறை மாற்றப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அதனை அரசியல் எனலாம். அந்த வகையில் அதிமுக, பாஜக செய்வது அரசியல் ஆக இருக்கலாம். ஆனால் திமுகவினரே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டதை விமர்சிக்கிறார்கள்.

ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பழனிவேல் தியாகராஜன், கட்சியின் தகவல் தொழில்நுட்பச் செயலாளராகவும், நிதி அமைச்சராகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். பிடிஆருக்கு ஸ்டாலின் மற்றும் சபரீசனுடன் நெருக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதுரை மாநகராட்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் தளபதி ஆகியோரை தாண்டி பிடிஆர் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.
இதனிடையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி சிக்கனம் என்ற பெயரில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் முரண்பட்டதால் மூத்த அமைச்சர்கள் வருத்தத்தில இருந்தனர். குறிப்பாக திமுக பொருளாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நிதி அமைச்சர் மனது வைத்தால் சில திட்டங்களை நிறைவேற்ற முடியும்' என சட்டப்பேரவையில் வெளிப்படையாகவே பேசி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இது ஒருபுறம் எனில், அரசு ஊழியர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள், அமைச்சர்களின் அதிருப்தி போன்ற பிரச்சனைகளுடனே இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிர்வாக ரீதியாக முடிவெடுகளை சிறப்பாக எடுத்தார். அதேநேரம் அரசியல் கணக்கு வேறாக இருந்ததால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், திமுக அரசு அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருந்தது. ஆயிரம் உதவி தொகை உள்ளிட்ட சில திட்டங்கள் நிதியைக் காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்டது. இதேபோல் சில திட்டங்களும் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.இதை எல்லாம் முதல்வர் ஸ்டாலினிடமே மூத்த அமைச்சர்கள் கூறி வருத்தப்பட்டுள்ளார்களாம்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான், பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அது தனது குரல் இல்லை என்று அமைச்சர் மறுத்தாலும், அது தொடர்பாக அவர் சார்பிலோ, திமுக சார்பிலோ ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த ஆடீயோ சர்ச்சை காரணமாக சபரீசன், உதயநிதியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படியே அமைச்சரவை மாற்றத்தில் பழனிவேல் தியாகராஜன் வசமிருந்த நிதித் துறை, தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதனிடையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல்கள் அதிகமாக ஒலிக்கின்றன. திரும்ப அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்கிற ரீதியில் அவரை வலியுறுத்தி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications