Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபச்சாரத்தில் பிரபல நடிகை.. 4 எழுத்து கொண்டவராமே.. 10 சீரியல் நடிகைகள்.. போலீஸிடம் லிஸ்ட் + போட்டோ

: நகைகளை கொள்ளையடித்து சின்னத்திரை நடிகைகளிடம் ஜாலியாக இருந்துள்ளார் சிவராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹோட்டலில் ரூம் போட்டு பிரபல நடிகைகளுடன் ஜாலியாக இருந்த நபர், போலீசில் தந்த வாக்குமூலமானது பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. யார் அந்த நடிகைகள் என்ற விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில், நிறைய வழிப்பறி புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது.. குறிப்பாக, ஹைவேஸ் பகுதியில், காரில் உட்கார்ந்து, காதல் செய்யும் ஜோடிகளை குறி வைத்து இந்த நகைப்பறிப்பு சம்பவம் நடந்து வந்துள்ளது.

இதுகுறித்த புகார்கள் பூந்தமல்லி போலீசுக்கு வரவும், போலீசாரும் களத்தில் குதித்தனர்.. காதல் ஜோடியை மட்டுமே வைத்து நகைபறிப்பு நடப்பதால், போலீசாரே, காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 ஹைவேஸ்

ஹைவேஸ்

அப்போதுதான் எதிர்பார்த்தபடியே, அந்த நபர் அங்கு வந்தார்.. தன்னை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வேலையை காட்டினார்.. இதையடுத்து, அவரை சுற்றிவளைத்து கொண்ட போலீசார், விசாரணையை அந்த நபரிடம் மேற்கொண்டனர்... அவர் பெயர் சிவராமன்.. 38 வயதாகிறது.. விருதாச்சலம் தாலுகா சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்.. 8 வருடங்களாகவே செயின்களை பறித்து வருகிறாராம்.. தினமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் பணம் கிடைக்குமாம்.. 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டு, ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளையடித்து உள்ளார்.

 ஜாலியோ ஜாலி

ஜாலியோ ஜாலி

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 45 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர்... ஹைவேஸ்களில் காரில் உட்கார்ந்திருக்கும் காதல் ஜோடிகளை மட்டுமே குறி வைத்து வேட்டையை நடத்துவாராம்.. இந்த நகைகளை அடகு கடையில் கொண்டுபோய், சிவராமன் விற்றுவிடுவாராம்.. அந்த பணத்தில் பெண்களிடம் ஜாலியாக இருப்பாராம்.. அதிலும் நடிகைகளிடம்தான் அதிக பணத்தை கொட்டி, உல்லாசம் அனுபவிப்பார் என்றும், இவரிடம் சிக்கிய துணை நடிகைகள் ஏராளம் என்கிறார்கள்.

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

பிறகு போலீசில் வாக்குமூலம் தரும்போது மேலும் சில தகவல்களை கூறினார்.. சின்ன வயதில் இருந்தே இவருக்கு நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.. இதனால் பல லட்சம் செலவு செய்து ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுத்து, பாலியல் புரோக்கர்கள் மூலம் டிவி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.. இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்திருக்கிறார்..

 Rs. 10000

Rs. 10000

கொள்ளையடித்த பணத்தில் பெரும்பாலும் நடிகைகளுக்கு தான் செலவு செய்திருக்கிறார். இவருக்கு பிடித்த மாதிரி நடப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்திற்கு மேல் ரூ.10 ஆயிரம் அள்ளி தருவார்.. இவர் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் இவரை பார்க்க மாட்டார்களாம்.. ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் தான் மூலம் தெரிந்து கொண்டதாக சொல்கிறார்..

 லிஸ்ட் லிஸ்ட்

லிஸ்ட் லிஸ்ட்

இப்போது விஷயம் என்னவென்றால், சிவராமன் தன்னுடைய வாக்குமூலத்தின்போது, போலீசாரிடம் ஒரு லிஸ்ட் தந்துள்ளார்... அந்த லிஸ்ட்டில் எந்தெந்த நடிகைகளுடன் அதிகமாக உல்லாசத்தில் ஈடுபட்டதாக புட்டுபுட்டு வைத்துள்ளார்.. அதிகளவில் 4 எழுத்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரம் தந்துள்ளார்.. 5 எழுத்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார்.. அது தொடர்பான போட்டோக்களையும் தந்திருக்கிறார் சிவராமன்.. மேலும் சில ஆதாரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தாராம்..

 10 நடிகைகள்

10 நடிகைகள்

அதில் உள்ள முன்னணி சின்னத்திரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் பெயர் பட்டியலை பார்த்து போலீசாரே கிறுகிறுத்து போய்விட்டனராம்.. முதல்கட்டமாக, சிவராமன் தந்த போட்டோக்கள் புகைப்படம் மற்றும் சில ஆதாரங்களின்படி 10 முன்னணி நடிகைகளிடம் மட்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார்களாம்.. அந்த சின்னத்திரை நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளதாம் இந்த சம்பவம்...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+