Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரா?.. "மேட்டரே" இனிதான்.. ஆளுநர் ரவி கிட்ட சொல்றோம்.. பதற வைத்த பாஜக.. "தூக்கத்தை" தொலைத்த திமுக

திமுக துறைகளின் ஊழல்களை 5ம் தேதி அண்ணாமலை அம்பலப்படுத்த போகிறாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின், தொடர் அறிவிப்புகளால், திமுக தரப்பு கதிகலங்கி வருவதாக கூறப்படுகிறது.. எனினும், எந்தவிதமான குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராகி கொண்டிருக்கிறது.

திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற முழக்கத்தோடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தீவிரத்தை முன்னெடுத்தது.. இந்த 3 மாதங்களில், பாஜக மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் சற்று அதிகம்தான்.

ஆரம்பத்தில் பாஜகவை கண்டுகொள்ளாமல் நகர்ந்து கொண்டிருந்த திமுகவின் அரசியல், சமீபகாலமாக, பாஜகவுக்கு பதிலளிக்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளதை மறுக்க முடியாது.

 திமுகவுக்கு செக்

திமுகவுக்கு செக்

போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை என ஒவ்வொரு கட்டத்தையும் பாஜக தாண்டி வருகிறது.. இதற்கு அடுத்தபடியாக, மொத்த அரசுக்கும் செக் வைக்கும் வகையில், ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. கடந்த வாரம் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. இன்னும் ஒரு வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன்... 2 அமைச்சர்கள் பதவி விலகும் அளவிற்கு ரூ.100 கோடியை தாண்டும் ஊழல் பற்றி வெளியிடுவோம்" என்று கூறியிருந்தார்.

 2 பேர் யார்?

2 பேர் யார்?

அண்ணாமலை இப்படி சொன்னதுமே திமுக தரப்பில் கலக்கம் சூழ்ந்தது.. அந்த 2 பேர் யார் என்ற குழப்பம் விரட்டியடித்தது.. ஒருவேளை தமிழக பாஜக அரசியல் செய்கிறதா? அல்லது திமுகவை பதற வைக்கவே அண்ணாமலை இவ்வாறு சொல்கிறாரோ? என்ற சந்தேகம் எழுந்தது.. பிறகு 4 நாளைக்கு முன்பு, மறுபடியும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "வரும் 3, 4 தேதிகளில், அந்த ஊழல் அமைச்சர்கள் யார் என்று சொல்ல போகிறேன்.. நீங்கள் திராவிட மாடல் பற்றி பேச பேச, உங்கள் ஊழல் பற்றி நாங்கள் பேசுவோம்" என்று கறாராக சொன்னார்.

 3வது முறை பேட்டி

3வது முறை பேட்டி

2வது முறையாக அண்ணாமலை சொன்னதுமே, கிட்டத்தட்ட அவர் சொல்வது உண்மைதானோ? என்ற சந்தேகம் திமுகவுக்குள் மீண்டும் நிலவியது.. நேற்று முன்தினம் திருச்சியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "வெயிட் பண்ணுங்க.. 3, 4ம் தேதி சொல்லி இருக்கேன் இல்லை? .. பிரஸ் மீட் வைக்கிறேன்.. ஊழல் துறைகளின் லிஸ்ட் வெளியிடறேன்" என்றார்.. 3-ம் தேதி என்றதுமே, ஒருவேளை கருணாநிதி பிறந்தநாளையொட்டி, திமுகவை டேமேஜ் செய்ய அந்த நாளை குறித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் சூழ்ந்தது.. அத்துடன் திமுகவை மேலும் இந்த அறிவிப்பு கலங்கடித்தது.

 மாற்றி சொன்ன அண்ணாமலை

மாற்றி சொன்ன அண்ணாமலை

ஆனல், இன்றைய தினம் அப்படி எதுவுமே அறிவிப்பு வரவில்லை.. 3-ம் தேதி என்றதை 5-ம் தேதிக்கு மாற்றி வைத்து உள்ளார் அண்ணாமலை.. மதுரையில் இருந்து, பாஜகவின் ஒவ்வொரு தலைவர்களும், ஒவ்வொரு துறைகள் குறித்த ஊழல்களை வெளியிட போகிறார்களாம்.. 5-ம் தேதியில் இருந்து 15-ம் தேதிவரை அந்த ஊழல் அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு முடிந்ததும், 15-ம் தேதி ஆளுநரை சந்திக்க போகிறார்களாம்.. திமுக அரசு இந்த ஒரு வருடத்தில் என்னென்ன ஊழல்களை செய்துள்ளதோ, அதையெல்லாம் ஒரு புத்தகமாக தயார் செய்துள்ள நிலையில், அதை ஆளுநரிடம் தரப்போகிறார்களாம்" இதுதான் அண்ணாமலை சொன்ன லேட்டஸ்ட் தகவல்.

 2 புள்ளிகள் யார்?

2 புள்ளிகள் யார்?

முதலில் 2 அமைச்சர்கள் என்று சொல்லிவிட்டு, இப்போது துறைவாரியாக எவ்வளவு ஊழல் என்பதை ஆதாரத்துடன் வெளியிட போகிறோம் என்பது, திமுகவுக்குள் எரிச்சலை கூட்டி உள்ளது.. ஒரு ஊழல் 100 கோடி ரூபாய் ஒப்பந்தம், இன்னொன்று 160 கோடி ரூபாய் ஒப்பந்தம்... இதற்காக அமைச்சர்கள் பதவி விலகுவார்கள். ஒரு ஒப்பந்தத்தை போட்டு உள்ளனர்... ஜிஏ பாஸ் பண்ணி இருக்கிறார்கள்.. ஒவ்வொருத்தரா சொல்வோம் என்று அண்ணாமலை சொன்ன விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

 திமுக அமைச்சர்கள்

திமுக அமைச்சர்கள்

ஏற்கனவே திமுக இப்படித்தான், கடந்த அதிமுக ஆட்சி மீது ஊழல் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து ஆளுநரிடம் தந்தது.. இப்படித்தான், ஊழல்கள் பற்றி ஒரு புத்தகமே போட்டு, அன்று டாக்டர் ராமதாஸ் கொண்டு போய் ஆளுநரிடம் தந்தார்.. ஆனால், அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டார்.. அந்த ஊழல் லிஸ்ட்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. இப்போது ஆளுநர் ரவி, ஏற்கனவே திமுக அரசு மீது காட்டத்தில் இருக்கும் நிலையில். தமிழக பாஜக கொண்டு போய் சேர்க்கும் ஊழல் புத்தகத்தின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை..

 உண்மையா - பொய்யா?

உண்மையா - பொய்யா?

தமிழக பாஜக சொல்வது உண்மையோ, பொய்யோ தெரியாவிட்டாலும், அந்த கட்சியின் சமீப கால நடவடிக்கைகளால் திமுக கடுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது.. "ஒன்று நீ, இல்லாவிட்டால் நான்", என்ற மாறி மாறி ஆளும் திராவிட கட்சிகளுக்கு நடுவில், வேறு கட்சியை உள்ளே நுழைக்க விருப்பமில்லை என்றலும், தொடர்ந்து கட்சியையும், ஆட்சியையும் டேமேஜ் செய்து வருவதால், திமுக தலைவர்கள் கொந்தளித்து போயுள்ளனராம்.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவும், அறிவிக்க போகும் புகார்களுக்கும், ஊழல்களுக்கும் பதிலடி தரவும் அறிவாலயம் தன்னை தயார் செய்து கொண்டிருப்பததாக தெரிகிறது..

 ஒருநாள் இருக்கு

ஒருநாள் இருக்கு

5-ம் தேதியும் பாஜக சொன்னதை செய்யவில்லை என்றால், அக்கட்சி மீதான நம்பக்கத்தன்மை மேலும் குறைய வாய்ப்புண்டு என்கிறார்கள்.. ஒருவேளை புகார்களையே தந்தாலும், அவையெல்லாம் எந்த அடிப்படையில தயாரானது என்ற உண்மையையும் ஆராய வேண்டி உள்ளது என்றும் சொல்கிறார்கள்.. நாளை ஒருநாள் தான் இடைவெளி இருக்கு.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+